கிள்ளிப்பாருங்க! கனவு இல்லைங்க... நிஜம்தான் வருது 'மல்டிலெவல்' கார் பார்க்கிங்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 மே
2019
01:53
பதிவு செய்த நாள்
மே 22,2019 01:52

கோவை:பல ஆண்டு கனவு, நிறைவேறப் போகிறது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தால் அடிக்கடி சொல்லப்பட்டு வந்த, 'மல்டிலெவல் கார் பார்க்கிங்' திட்டத்தை செயல்படுத்த, 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டு விட்டது. ஆர்.எஸ்.புரத்தில் அதற்கான வேலையும் துவங்கி விட்டது.




கோவை நகர்ப்பகுதியில் வாகன பயன்பாடு அதிகரித்து விட்டது. வணிக நிறுவனங்களுக்கு வரும் மக்கள், வாகனங்களை ரோட்டில் ஆங்காங்கே நிறுத்துவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. 'பார்க்கிங்' வசதி இல்லாததால், வாகனம் நிறுத்துவதற்கும் இடம் தேடி அலைய வேண்டியிருக்கிறது.



டவுன்ஹால், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோடு ஆகிய இடங்களில், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு, மாநகராட்சி திட்டமிட்டது. முதலில், கட்டி, இயக்கி, பராமரித்து ஒப்படைக்கும் (பிபிபி) முறையில், 'டெண்டர்' கோரப்பட்டது.



பல கோடி ரூபாய் முதலீடு செய்து, 'மல்டிலெவல் பார்க்கிங் சென்டர்' கட்டி விட்டு, வாகனங்கள் நிறுத்த சொற்பத்தொகை வசூலிக்கும் பட்சத்தில், முதலீட்டுத்தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப பெற முடியாது என கருதி, ஒப்பந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.

அதனால், 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில் செயல்படுத்த முடிவெடுத்து, மறு டெண்டர் விடப்பட்டது. இதிலும், சிக்கல் எழுந்தது. 'ஸ்மார்ட் சிட்டி' நிதியை, மத்திய அரசு அங்கீகரித்த எல்லைக்குள் வரும், 14 வார்டுகளுக்குள் மட்டுமே செலவழிக்க வேண்டும்; மற்ற பகுதிகளில் செலவழிக்க அனுமதி தர முடியாது என, திட்டவட்டமாக கூறி விட்டது.



அதனால், முதல்கட்டமாக, ஆர்.எஸ்.புரம் பகுதியில் மட்டும் செயல்

படுத்தப்படுகிறது. ஒப்பந்த நிறுவனத்துக்கு, மாநகராட்சி நிர்வாகம் 'ஒர்க் ஆர்டர்' வழங்கி விட்டது. வேலையையும் அந்நிறுவனம் துவங்கி விட்டது. 18 மாதங்களுக்குள் பணியை முடிக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஓராண்டுக்குள் ஆர்.எஸ்.புரம் பகுதி முழுவதும் மாறி விடும். அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் தயாராகி விடும். டி.பி., ரோட்டில் பாதாள சாக்கடை குழாய், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. பின், தொலைதொடர்பு மற்றும் மின் ஒயர்கள் கொண்டு செல்வதற்கான தனி கட்டமைப்பு ஏற்படுத்தி, மாதிரி சாலை உருவாக்கப்படும். அதன்பின், டி.வி., சாமி ரோட்டில் வேலை துவங்கும்' என்றனர்.


382 கார் நிறுத்தலாம்!


புதிய மல்டிலெவல் கார் பார்க்கிங்கில், தரைத்தளத்துடன் நான்கு தளங்கள் அமைக்கப்படும். ஒரே நேரத்தில், 382 வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்படும். 'லிப்ட்' உதவியுடன் கார்களை எடுத்துச் சென்று நிறுத்தும் வசதி செய்யப்படவுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diya -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-201902:11:33 IST Report Abuse
Diya Awesome. Great job. Should be available in every dense locality with decent rent.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X