குப்பைகளை சேகரிக்க 'பேட்டரி' வாகனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2019
02:19

வால்பாறை:வால்பாறை நகராட்சி சார்பில், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், 'பேட்டரி'யில் இயங்கும் வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. வால்பாறை நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் மட்டும் நாள்தோறும் ஐந்து டன் குப்பைகள் வெளியாகின்றன.


இந்த குப்பைக்கழிவு கள் ஸ்டேன்மோர் ரோட்டில் உள்ள திறந்தவெளிக்குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகளால் கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களும், கல்லுாரி மாணவர்களும் கடுமையாக

பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடக்கழிவு மேலாண் மை திட்டப்பணிக்காக நகராட்சி சார்பில் ஏற்கனவே பல கோடி ரூபாய் வரை செலவு செய்தும் இந்த திட்டம் முழுமை பெறவில்லை. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் இரண்டு கோடியே, 56 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிக்கான அனைத்து ஏற்பாடுகள் நகராட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க பேட்டரியில் இயங்கும் வாகனங்களை நகராட்சி நிர்வாகம் வாங்கியுள்ளது.


இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை நகராட்சி

யில் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணி நடந்து வருகிறது.முதல் கட்டமாக வீடுகளிலிருந்து குப்பைகளை சேகரிக்கும் வகையில் குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. டீசல் பயன்பாட்டை தவிர்த்து, புகை மாசு இல்லாமல் இயங்கும் வகையில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த வாகனங்களில் ஐந்து மணி நேரம் மின்சாரம் சார்ஜ் செய்தால், தொடர்ந்து எட்டு மணி நேரம் இயக்கலாம். மேலும் இந்த வாகனங்களில், 100 கிலோ எடையுள்ள குப்பைகளை மட்டுமே கொண்டு செல்ல முடியும். இவ்வாறு, தெரிவித்தனர்.


குப்பை கொட்டாதீங்க...


சுற்றுலாநகரமான வால்பாறையை சுகாதாரமான முறையில் வைத்திருக்க நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குப்பை தொட்டியில் மட்டுமே, வீடு மற்றும் கடைகளிலிருந்து வெளியாகும் குப்பைக்கழிவுகளை கொட்ட வேண்டும். திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம்

கேட்டுக்கொண்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X