நாளை ஓட்டு எண்ணிக்கையால் வேட்பாளர்கள்... திக்., திக்...! எதிர்பார்ப்புடன் அரசியல் கட்சியினர், பொதுமக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2019
05:11

புதுச்சேரி : லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 'திக் திக்' மன நிலையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.



லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, கடந்த 19ம் தேதிஇறுதி கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. புதுச்சேரி தொகுதியில் இரண்டாம் கட்டமாக ஏப்., 18 ம் தேதி தேர்தல் நடந்தது. இங்கு, மொத்தமுள்ள 9 லட்சத்து 73 ஆயிரத்து 161 வாக்காளர்களில், 7 லட்சத்து 92 ஆயிரத்து 971 வாக்காளர்கள் ஓட்டளித்தனர். ஓட்டுப்பதிவு சதவீதம் 81.48 ஆகும். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 77.66 சதவீத ஓட்டுகள் பதிவாகின.



தேர்தல் முடிந்து 35 நாட்களுக்கு பிறகு, நாளை (23ம் தேதி) ஓட்டுகள் எண்ணப்படுகிறது.லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் மற்றும் மகளிர் பாலிடெக்னிக் ஆகிய இரு இடங்களில் 23 சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுகளும்,காரைக்கால் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 5 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுகள், மாகி ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலை பள்ளி, ஏனாமில் மினி சிவில் ஸ்டேஷனில் உள்ள கருத்தரங்கு கூடம் ஆகியவற்றில் தலா ஒரு சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுகள் எண்ணப்படுகிறது.



தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைதேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக்கில் தனி அறையில் எண்ணப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.



புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங்., தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், எதிரணியில், அ.தி.மு.க.,- என்.ஆர்.காங்., கூட்டணியில்என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி இருவரும் மோதினர். அத்துடன், அ.ம.மு.க., சார்பில் தமிழ்மாறன், மக்கள் நீதி மய்யம் சார்பில் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன்,நாம் தமிழர் கட்சி ஷர்மிளா பேகம் உள்ளிட்டோரும் களத்தில் குதித்தனர்.



தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில்காங்., கூட்டணியில் தி.மு.க., வேட்பாளர் வெங்கடேசன், என்.ஆர்.காங்., வேட்பாளர் நெடுஞ்செழியன், நாம் தமிழர் கட்சி கவுரி, அ.ம.மு.க முருகசாமி, புதுச்சேரி வளர்ச்சி கட்சி ரவிசங்கர் உள்ளிட்டோர் களமிறங்கினர்.



சுட்டெரிக்கும் வெயிலில் 20 நாட்களுக்கு மேலாக சுழன்று சுழன்று பிரசாரம் செய்த வேட்பாளர்கள்,தேர்தல் முடிந்து வீட்டில் முடங்கி கிடந்தாலும் தேர்தல் முடிவு எப்படி இருக்குமோ என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.



தேர்தல் முடிந்து 35 நாள் காத்திருந்த நிலையில்,நாளை (23ம் தேதி) ஓட்டுகள் எண்ணப்படுவதால் அவர்கள் "திக் திக்' மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோன்று, புதுச்சேரி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு,தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



கட்சிகளின் தேர்தல் கணக்கு:


தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும் என காங்., கணக்கு போட்டு வைத்துள்ள நிலையில், புதுச்சேரியில் காங்., ஆட்சியின் செயல்பாடுகளால் மக்கள் தங்களைத்தான் ஆதரிப்பார்கள் என, என்.ஆர்.காங்., நம்புகிறது. அதே சமயத்தில், கடைசி நேர அதிரடியாக அ.ம.மு.க., மற்றும் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுகளை பிரித்துள்ளதால், காங்., மற்றும் என்.ஆர்.காங்., கட்சியினரை பெரிய அளவில் கலக்கமடைய செய்துள்ளது. எனவே, புதுச்சேரி தொகுதியை பொறுத்த வரையில், வெற்றி வாய்ப்பை எளிதில் கணிக்க முடியாமல், ஒவ்வொரு நாளும் வேட்பாளர்கள் பதட்டத்துடன் காத்திருப்பவர்களுக்கு நாளை (23ம் தேதி) விடை கிடைத்துவிடும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X