நெடுஞ்சாலை, நகராட்சி அதிகாரிகளிடையே... பனிப்போர்! கடலூரில் புதிய பாலம் கட்டுவதில் சிக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2019
05:26

கடலுார் : கடலுாரில் உள்ள நுாற்றாண்டு கால இரும்பு பாலம், மீண்டும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடையே நிலவும் ஈகோ பிரச்னையால், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.



கடலுார் புதுநகரையும், திருப்பாதிரிப்புலியூரையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் காலத்தில், இரும்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அதன் அருகிலேயே அண்ணா பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக தான் தற்போது வாகன போக்குவரத்து நடக்கிறது. இரும்பு பாலத்தில், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.



இந்நிலையில், பாலத்தின் ஒரு பகுதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இடிந்து விழுந்தது. அந்த பாலத்தின் வழியாக சென்ற குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் உடைந்து விழுந்தன. பின்னர், அந்த பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, தற்போது குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் பெருகி வரும் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதற்காக, இரும்பு பாலத்தை இடித்து விட்டு, கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடி மதிப்பீட்டில், புதிய மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


இதற்காக அந்த பாலத்தின் கீழ் மண் பரிசோதனை, கடந்தாண்டு நவம்பர் மாதம், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்தது. அத்துடன், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, மத்திய அரசு அனுமதி கிடைத்ததும், பணி மேற்கொள்ளப்படும் என்றனர்.



பாலம் இடியும் அபாயம் :


ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தின் மற்ற பகுதிகளும், எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பாலம் இடியும் போது, அந்த வழியே செல்லும் குடிநீர் குழாய்கள் உடைந்து, நகராட்சியில் 20 வார்டு மக்களுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்படும்.

இதனை கருத்தில்கொண்டு, பழுதான இரும்பு பாலத்தை சீரமைத்து, குடிநீர் குழாய்களை பொருத்துவதற்கு ரூ.2.80 கோடி மதிப்பீட்டில், நகராட்சி நிர்வாகம் திட்டத்தை தயாரித்துள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கி, இரும்பு கர்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.



பணிகள் தாமதம்:


இரும்பு பாலத்தில், சீரமைப்பு பணியை மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கேட்டு, நகராட்சி நிர்வாகம் கடிதம் அனுப்பி உள்ளது. இதுவரை அனுமதி கிடைக்காததால், இரும்பு பாலத்தை சீரமைத்து, குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணி தடை பட்டுள்ளது.



யார் காரணம்?


தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, இரும்பு பாலத்தை சீரமைத்து, குடிநீர் பைப் பொருத்துவதற்கு, நகராட்சி நிர்வாகத்தினர் அனுமதி கேட்டுள்ளனர். இந்த திட்ட பணி குறித்து, தலைமை அலுவலகத்திற்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே குடிநீர் பிரச்னை ஏற்படும் அவசர அவசியம் இருந்தால், பழைய பாலத்தில் உள்ள இரும்பு பொருட்களை அகற்றி, பாதுகாப்பாக எங்களது அலுவலகத்தில் கொண்டு வந்து ஒப்படைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம்தான், இப்பிரச்னையில் உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.



ஈகோ பிரச்னை


இரும்பு பாலம் இடிந்து விழுந்தால், 20 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்படும். நகராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடையே உரிய ஒருங்கிணைப்பு ஏற்படாததால், இரும்பு பாலத்தை சீரமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. அதிகாரிகளிடையே நிலவும் ஈகோ பிரச்னையால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.



நிதி வீணாகும் அவலம்:


பழைய இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு, ரூ.25 கோடி செலவில் புதிய பாலம் அமைப்பதற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், நகராட்சி சார்பில் சீரமைக்கப்பட்ட பாலத்தை இடித்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும். மேலும், குடிநீர் குழாய்களை கொண்டு செல்வதற்கு, கூடுதலாக நிதி செலவிட வேண்டிய நிலை உருவாகும். எனவே அரசு நிதி வீணாவதை தடுக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கடலுார் நகராட்சி அலுவலர்கள் கலந்தாய்வு நடத்தி, பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-மே-201908:35:13 IST Report Abuse
Bhaskaran வெள்ளைக்காரன் காலத்தில் போடப்பட்ட இரும்புப்பாலத்தில் பழைய இரும்பை பல லட்சத்துக்கு விலைக்கு போடுவதற்கு பேசி வைத்திருக்கும்போது அதை சீரமைக்க வேண்டும் என்று சொன்னால் கோபம் வருமா வராதா ஐயா (பழைய இரும்பு வியாபாரியிடம் முன்பணம் வேறு வாங்கியிருந்தால் கேட்கவே வேண்டாம் )
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X