| சாலையில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களால் விபத்து அபாயம் Dinamalar
சாலையில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களால் விபத்து அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 மே
2019
06:43

திண்டிவனம் : சாலையில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களால் திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலை ஜெயபுரம், காந்தி நகரில் ஏராளமான உணவகங்கள், வாகன புகை ஆய்வு மையம் இயங்கி வருகிறது. இந்த உணவகங்களுக்கு சாப்பிட வருபவர்களும்; வாகன புகை ஆய்வு சான்றிதழ் பெற வருபவர்களும் தங்கள் வாகனங்களை, தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி விடுகின்றனர். நீண்ட வரிசையில், ஆபத்தான முறையில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிற்பதால், அப்பகுதியைக் கடக்கும் பிற வாகனங்களுக்கு

விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னால் செல்லும் வாகனங்களை பின் தொடரும் வாகனங்கள், இடதுபுறம் ஒதுங்கி முந்த முயலும் போது, நின்றிருக்கும் வாகனங்களால், அதன் ஓட்டுனர்கள் நிலைகுலைந்து போகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ரோந்து பிரிவினரும், தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், அதை கண்டு கொள்வதாக தெரியவில்லை

என, வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை முறைப்படுத்தி, பார்க்கிங் வசதியில்லாத உணவகங்கள், வாகன ஆய்வு மையத்திற்கு தடை விதிக்க இரு துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X