| கடும் வறட்சியால் கருகும் பயிர்கள் சங்கராபுரம் விவசாயிகள் வேதனை Dinamalar
கடும் வறட்சியால் கருகும் பயிர்கள் சங்கராபுரம் விவசாயிகள் வேதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 மே
2019
06:43

சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் மழை இல்லாததால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் பயிரிட்டுள்ள மரவள்ளி, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சங்கராபுரம் தாலுகாவில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் கரும்பு, மரவள்ளி, மக்காச்சோளம் உள்ளிட்டவைகளை பயிரிட்டுள்ளனர். பல விவசாயிகள் மானாவாரி சாகுபடி மூலம் மரவள்ளி, மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் சங்கராபுரம் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக சங்கராபுரம் பகுதியில் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் வறண்டு போயின. விவசாய கிணறுகளில் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்தது.

தண்ணீர் இறைக்க முடியாததால், கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளி போன்ற பயிர்கள் தண்ணீர் இன்றி 100 ஏக்கருக்கு மேல் காய்ந்து கருகி வருகிறது. இதனால், விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் உள்ளனர். சங்கராபுரம் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில், கருகி வரும் விவசாய பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு, கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X