| 'கிளைமாக்ஸ்'! விழுப்புரத்தில் ஜெயிக்கப் போவது யாரு? ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் 'ரெடி Dinamalar
'கிளைமாக்ஸ்'! விழுப்புரத்தில் ஜெயிக்கப் போவது யாரு? ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் 'ரெடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 மே
2019
06:43

விழுப்புரம் : 'விழுப்புரம் லோக்சபா தொகுதியில் ஓட்டு எண்ணும் பணி முடிவதற்கு, நள்ளிரவு 1:00 மணியாகி விடும்' என, விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சுப்பிரமணியன் தெரிவித்தார்.நேற்று அவர் அளித்த பேட்டி: விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணி, விழுப்புரத்தில் உள்ள அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், நாளை 23ம் தேதி காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டுகள் எண்ணி முடித்தவுடன், 8:30 மணிக்கு, ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி துவங்கும். விழுப்புரம் லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டு, ஓட்டுகள் எண்ணப்படும்.ஒவ்வொரு மேஜையிலும் தலா ஒரு ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர், ஓட்டு எண்ணிக்கை உதவியாளர், மைக்ரோ அப்சர்வர் பணியில் ஈடுபடுவர். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு ஏெஜன்டை வேட்பாளர்கள் நியமிக்கலாம். ஓட்டு எண்ணும் அறைக்குள் மொபைல் போன், லேப் டாப் உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. ஒவ்வொறு சுற்று முடிந்தவுடன் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரங்கள் அறிவிக்கப்படும்.எவ்வளவு நேரமாகும்?


ஒவ்வொரு ஓட்டுப் பதிவு இயந்திரத்திலும் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்கு 30 நிமிடங்களில் இருந்து, 40 நிமிடங்கள் வரை நேரம் எடுக்கும். 'விவி பேட்' இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு 45 நிமிடங்களில் இருந்து, 1 மணி நேரம் வரை தேவைப்படும்.

ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பின், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா 5 'விவி பேட்' இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். 6 சட்டசபை தொகுதிகளில் 'விவி பேட்' இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகள் ஒரே நேரத்தில் எண்ணப்படும்.உளுந்துார்பேட்டை தொகுதியில் 25 சுற்றுகளாகவும், திண்டிவனம் தொகுதியில் 19, வானுார் தொகுதியில் 20, விழுப்புரம் தொகுதியில் 21, விக்கிரவாண்டி தொகுதியில் 20, திருக்கோவிலுார் தொகுதியில் 21 சுற்றுகளாகவும் ஓட்டுகள் எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை முடிவதற்கு நள்ளிரவு 12:00 மணியில் இருந்து 1:00 மணி வரையாகி விடும்.1000 ஊழியர்கள்:


ஓட்டு எண்ணும் பணியில் 102 கண்காணிப்பாளர்கள், 102 உதவியாளர்கள், 102 மைக்ரோ அப்சர்வர்கள் உள்ளிட்ட 1000 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையும் 'சிசிடிவி' கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.மேலும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப் பதிவு இயந்திரங்களை வெளியே எடுப்பது, ஓட்டுகளை எண்ணுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் வீடியோ பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அமைதியாகவும், நல்ல முறையிலும் நடந்து கொள்ள வேண்டும். ஏெஜன்டுகள் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினால் வெளியேற்றப்படுவர். ஓட்டு எண்ணும் பணிகளை பார்வையிடுவதற்காக, 2 பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இவ்வாறு, கலெக்டர் சுப்பிரமணியன் கூறினார். எஸ்.பி., ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி பிரியா உடனிருந்தனர்.தபால் ஓட்டு எண்ணிக்கை

தேர்தல் தொடர்பான பணியில் உள்ள அரசு ஊழியர்கள் பதிவு செய்யும் தபால் ஓட்டுகள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாளை 23ம் தேதியன்று காலை 6:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தபால் ஓட்டுகள், ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அவை, 8:00 மணிக்கு எண்ணப்படுகிறது. தபால் ஓட்டுகளை எண்ணுவதற்காக 4 மேஜைகள் போடப்பட்டுள்ளன.

நேற்று காலை வரை, 4372 தபால் ஓட்டுகள் வந்துள்ளது. நாளை 23ம் தேதி காலை 8:00 மணிக்குள் வருகின்ற தபால் ஓட்டுகள், ஓட்டு எண்ணும் மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.மூன்று அடுக்கு பாதுகாப்பு

ஓட்டு எண்ணும் மையத்திற்கு, மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஓட்டு எண்ணும் மையத்தின் வாயிலில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் பேரிகார்டுகளை வைத்து, விழுப்புரம் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

ஓட்டு எண்ணும் மையத்தின் வாயிலில் ரிசர்வ் போலீசார் பணியில் இருப்பார்கள். ஓட்டு எண்ணும் அறைகளுக்கு வெளியே மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஓட்டு எண்ணிக்கை மையத்துக்குள், அதற்கான அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முழுவதுமாக பரிசோதித்து மொபைல் போன் வைத்திருந்தால் போலீசார் வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஓட்டு எண்ணிக்கை முடிந்து செல்லும்போது திருப்பி தரப்படும்.

எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் 4 டி.எஸ்.பி.,க்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 513 போலீசார், ஓட்டு எண்ணும் மையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X