பயன்பாட்டிற்கு வருவது எப்போது மீனவர்கள் ஏக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2019
23:21

ராமநாதபுரம் : தேர்தலுக்காக அவசர கோலத்தில் அரைகுறையாக திறக்கப்பட்ட மூக்கையூர் துறைமுகம் பயன்பாடின்றி உள்ளதால். மீனவர்கள் சிரமத்தில் உள்ளனர். இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் 1,520 விசைப்படகுகள் உள்ளன. குறுகிய துாரத்தில் அதிக எண்ணிக்கையிலான மீன் பிடி படகுகள் உள்ளதாலும், மிக அருகாமையில் இலங்கை கடல் எல்லை அமைந்துள்ளதாலும், மீன் பிடிக்க செல்லும் படகுகள் எல்லை தாண்டுவதாக இலங்கை அரசு மீனவர்களை கைது செய்வதும், அவர்களை தாக்கி துன்புறுத்துவது, வலைகளை வெட்டி சேதப்படுத்துதல், சுட்டுக்கொல்வது போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.மீன்பிடி படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்வதால், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.



இந்த நெடுங்கால பிரச்னையை இரு நாட்டு மீனவர்கள், அதிகாரிகள், பேசியும் தீர்வு ஏற்படாத நிலை உள்ளது. இதற்கு மாற்று திட்டங்களை மத்திய மாநில அரசுகள் கொண்டு வர முடிவு செய்தது. இரு திட்டங்கள்முதலாவதாக ஆழ்கடல் மீன் பிடி திட்டம். அதற்கான அதி நவீன படகுகள் உருவாக்கி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது. இரண்டாவதாக மூக்கையூர் மீன்பிடி துறைமுகம் அமைப்பது. இந்த துறைமுகப் பகுதி இலங்கைக்கு பின் பகுதியில் வருவதால் இப்பகுதியில் படகுகள் குறைந்த அளவிலேயே கடலுக்குள் சென்று வருகின்றன.



மீன் பிடி தொழிலுக்கான அதிக கடல் பரப்பு உள்ளதால் இதனை பயன்படுத்துவது ஆகிய இரண்டு மாற்று திட்டங்களை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் முன் வந்தன.ஆழ்கடல் மீன் பிடி திட்டம் ஆழ்கடல் மீன் பிடி திட்டத்தில் படகு கட்டுவதற்கு மீனவர்கள் பங்களிப்பு 10 சதவீதம், வங்கி கடன் 20 சதவீதம், 70 சதவீதம் மத்திய மாநில அரசுகள் மானியமாக வழங்கின. இதில் 10 க்கும் மேற்பட்ட படகுகள் கட்டுமான பணிகள் நிறைவு பெறவுள்ளது. தற்போது 4 படகுகள் ஆழ்கடல் மீன் பிடிப்பில் உள்ளனர். தொடர்ந்து ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய, மாநில அரசுகள் வழங்க தயாராக உள்ளன.மூக்கையூர் மீன் பிடி துறைமுகம்ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து 10 கி.மீ.,ல் அமைந்துள்ள மூக்கையூர் பகுதியில் புதிய மீன் பிடி துறைமுகம் அமைக்க 2016 டிச., 13 ல் அனுமதி அளிக்கப்பட்டது.




2017 மார்ச்சில் 113.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவக்கப்பட்டது. 2019 ஏப்., மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் தலா 50 சதவீதம் நிதி பங்களிப்பில் பணிகள் துவக்கப்பட்டது.வசதிகள்கிழக்கு அலை தடுப்பு சுவர் 300 மீட்டர், மேற்கு அலை தடுப்பு சுவர் 370 மீட்டர், கடல் அரிப்பு தடுப்பு சுவர் 495 மீட்டர், மீன் ஏலக்கூடம், மீன் வலை பின்னும் கூடம், போக்குவரத்து வாகன வசதிகளுக்காக இருவழி சாலை, மீன் வள நிர்வாக அலுவலகம், வலை பாதுகாப்பு கூடம், படகு பழுது பார்க்கும் இடம், தகவல் தொடர்பு கோபுர அறை, சுற்றுச்சுவர், போர்வெல் தண்ணீர் சேமிக்க தரை மட்ட தொட்டிகள், 2.75 லிட்டர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி, பொது கழிப்பறை, பவர் ரூம், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம், கழிவு நீர் செல்ல கால்வாய், பசுமை தோட்டம் போன்ற பல்வேறு வசதிகள் இந்த துறைமுகத்தில் அமைக்க திட்டமிட்டு, கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.



படகுகள் நிறுத்தம் இங்கு 250 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200 நாட்டுப்படகுகள் நிறுத்துவதற்கும். அதில் பிடிக்கப்படும் மீன்களை மீனவர்கள் வாகனங்களில் எடுத்து செல்வதற்கும் அதே பகுதியில் விற்பனை செய்யவும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும் போது, ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியில் விசை, நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் நெருக்கடி குறையும். நெருக்கடி குறையும் பட்சத்தில் மீனவர்கள் தேவையின்றி இலங்கை எல்லைக்கு செல்வது குறையும்.அவசரகோலத்தில் திறப்பு விழாஇந்த துறைமுகத்தின் பணிகள் நிறைவு பெறுவதற்கு முன்பே தேர்தலுக்காக பணிகள் நிறைவு பெறுவதற்கு முன்பே மூக்கையூர் மீன் பிடி துறைமுகம் திறக்கப்பட்டதால் மீனவர்களின் பயன்பாட்டிற்கு இன்று வரை வரவில்லை.



இன்னும் முழுமையாக பணிகள் நிறைவு பெறவில்லை. மீனவர்கள் மத்தியில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது..மணல் மேடுபடகுகள் நிறுத்தும் பகுதியில் போதுமான ஆழம் இல்லாத நிலையில் அலைகளால் மணல் மேடாகியுள்ளது. இதனால் விசைப்படகுகள் நிறுத்தம் செய்யும் பகுதியில் படகுளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துறைமுகத்தின் நுழைவு வாயில் பகுதியில் கடல் பகுதியில் பாறைகள் உள்ளதால், படகுகள் தரை தட்டி சேதமடையும் வாய்ப்பு உள்ளது. பாறைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



கடல் பகுதியை ஆழப்படுத்த திட்டம்துறைமுகப்பகுதியில் தேங்கியுள்ள மணல், நுழைவு வாயில் பகுதியில் இடையூறாக உள்ள பாறைகளை அகற்றம் செய்வதற்காக கடல் ஆழப்படுத்தும் இயந்திரம் பொருத்திய கப்பல் வந்துள்ளது. இதற்கு தேவையான குழாய்கள் இறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பாம்பன் துாக்குப்பாலத்தை கடப்பதற்காக இரு நாட்களாக காத்திருக்கும் நிலையில் உள்ளது. இந்த துார் வாரும் இயந்திரம் பொருத்திய கப்பல் வந்தால் ஒரு மாதத்திற்குள் அனைத்துப்பணிகளும் நிறைவு பெறும். ஜூலை மாதம் முதல் துறைமுகம் செயல்பாட்டிற்கு வரும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X