| அதிர்ச்சி! அரசு ஊழியர், ஆசிரியர் ஓட்டு ஐம்பது சதவீதம் மட்டுமே பதிவு! Dinamalar
அதிர்ச்சி! அரசு ஊழியர், ஆசிரியர் ஓட்டு ஐம்பது சதவீதம் மட்டுமே பதிவு!
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 மே
2019
06:45

கோவை: கோவை லோக்சபா தொகுதியில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டுச்சீட்டுகளில், 50 சதவீதத்துக்கும் குறைவானவையே, ஓட்டுப்பதிவு செய்து, திரும்ப அளிக்கப்பட்டுள்ளன.கோவை லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, தடாகம் ரோடு ஜி.சி.டி., மையத்தில் இன்று நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் ராஜாமணி கூறியதாவது: மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள, மின்னணு ஓட்டு இயந்திரங்கள், காலை, 7:30 மணிக்கு வெளியே எடுக்கப்படும். 8:00 மணிக்கு எண்ணிக்கை துவங்கும். அதற்கான ஏற்பாடுகள், 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளன.கோவை லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள 6 சட்டசபை தொகுதிகளில், 5 தொகுதிகளில் 8 மணிக்கும், ஆறாவது சட்ட சபை தொகுதியில் மட்டும், 8:30 மணிக்கும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். சூலுார் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, 8:00 மணிக்கு தொடங்கும்.கோவை லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையுடன், சூலுார் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளும், இங்கு எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 14 டேபிள்கள் போடப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை நடக்கும். கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மட்டும், 20 டேபிள்கள் போடப்படுகின்றன.ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில், 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேட்பாளர்கள், அவர்களது ஏஜன்டுகள், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அரசியல் கட்சிகளின் முகவர்கள், பணியாளர்கள் உட்பட யாரும், அடையாள அட்டை இன்றி அனுமதி கிடையாது.தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர், ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர் தவிர யாருக்கும் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை.அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள், பேனா, கையேடு மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு டேபிளுக்கு வந்த முகவர், மற்றொரு டேபிளுக்கு செல்ல முடியாது.தேர்தல் அலுவலர் என்ற முறையில், எனது அறையில் தபால் ஓட்டு எண்ணிக்கை 8:00 மணிக்கு தொடங்கும். கோவை லோக்சபா தொகுதிக்கு, 12,000 தபால் ஓட்டுச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.அவற்றில், ஓட்டுப்பதிவு செய்தபின், 5,527 ஓட்டுச்சீட்டுகள் மட்டுமே திரும்ப வந்துள்ளன. இன்று காலை, ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் வரை, தபால் ஓட்டுச்சீட்டுகள் வந்து சேர அனுமதியுண்டு. பொதுமக்களுக்கு சுற்று வாரியாக முன்னணி நிலவரம் அறிவிக்க, கல்லுாரிக்கு வெளியே, மைக்செட் நிறுவப்பட்டுள்ளது.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.எந்த தொகுதிக்கு எத்தனை சுற்று?


பல்லடம் தொகுதிக்கு, 30 சுற்றுகள், சூலுார் தொகுதிக்கு 24 சுற்றுகள், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு 22 சுற்றுகள், கோவை வடக்கு தொகுதிக்கு 21 சுற்றுகள், கோவை தெற்கு தொகுதிக்கு 20 சுற்றுகள், சிங்காநல்லுார் தொகுதிக்கு, 23 சுற்றுகள் ஓட்டு எண்ணப்பட உள்ளது.ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு மேற்பார்வையாளர், உதவியாளர், மைக்ரோ அப்சர்வர் என, 14 டேபிளுக்கும் சேர்த்து, 42 பேர் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு உதவி செய்ய 25 பணியாளர்கள் இருப்பர். மின்னணு இயந்திரங்களில் ஓட்டு எண்ணப்பட்ட உடன், 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் இருக்கும் ஓட்டுகள் எண்ணப்படும்.இத்தகவலை, கலெக்டர் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X