| பிளஸ்-1 சிறப்பு துணை தேர்வுக்கு 771 மாணவர்கள் விண்ணப்பம் Dinamalar
பிளஸ்-1 சிறப்பு துணை தேர்வுக்கு 771 மாணவர்கள் விண்ணப்பம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
00:48

ராமநாதபுரம் : பிளஸ்-1 அரசு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வுக்குராமநாதபுரம் மாவட்டத்தில் 771 பேர் விண்ணப்பித்துள்ளனர்.கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-1 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்காக ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடந்தது.



துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கஏற்கனவே தேதி அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் மூலம் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்கள் மே 10 முதல் 14வரை தாங்கள் படித்தபள்ளிகள் மூலமாகவும், நேரடி தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள்மூலமாகவும் விண்ணப்பித்தனர். மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மே 16, 17 தேதிகளில் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம், என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



அதன்படி சிறப்பு துணைத்தேர்வுக்கு ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 215, மண்டபம் 221, பரமக்குடி 335 பேர் விண்ணப்பித்துள்ளனர்.மொழிப்பாடங்களான தமிழில் 82, ஆங்கிலம் 111, இயற்பியல் 102, வேதியியல் 76, பொருளாதாரம் 69, என மொத்தம் 771 பேர் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 14 முதல் 21 வரை நடப்பதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X