| 2 கட்டுப்பாடு இயந்திரம் திருப்போரூரில் பழுது Dinamalar
2 கட்டுப்பாடு இயந்திரம் திருப்போரூரில் பழுது
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
00:55

காஞ்சிபுரம்: திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையத்தில், இரண்டு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பழுதாகின.திருப்போரூர் சட்டசபை தொகுதிக்கான ஓட்டுகள், காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லுாரியில், நேற்று எண்ணப்பட்டன. மொத்தம், 307 ஓட்டுச்சாவடிகளுக்கான கட்டுப்பாட்டு இயந்திரங்கள் எண்ணப்பட்டன. அப்போது, 79 மற்றும் 132 ஆகிய கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பழுதாகின.இயந்திரங்களில் பதிவான மொத்த ஓட்டுகள், முழுமையாக காண்பிக்கப்படவில்லை. இதனால், கட்சியினர் கடுப்பாகினர். அதிகாரிகளிடம், இதுகுறித்து கேட்டு கூச்சலிட்டனர். தொடர்ந்து, ஒப்புகை சீட்டு எனப்படும், 'விவிபிஏடி' இயந்திரத்தை எண்ண அனுமதி வழங்கி, தேர்தல் நடத்தும் அதிகாரியான ராஜு உத்தரவிட்டார்.ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் உள்ள சீட்டுளை எண்ணி, மொத்த ஓட்டுகளை ஈடுசெய்ய அதிகாரி அனுமதியளித்த பிறகு, அனைத்து கட்சியினர் சம்மதம் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X