கோவை சி.எஸ்.ஐ., பிஷப் கோர்ட்டில் சரண்டர்: பள்ளி தகராறு வழக்கில் தலைமறைவானவர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2019
00:58

கோவை:கோவையில் நடந்த மோதல் வழக்கில், சி.எஸ்.ஐ., பிஷப், கோர்ட்டில் சரணடைந்தார்.கோவை, ரேஸ்கோர்சில் செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பிஷப் அலுவலக நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு, தலைமையாசிரியர் பணியிடம் நிரப்புவது தொடர்பாக, இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது.


இதையடுத்து கடந்த 1ம் தேதி, ரேஸ்கோர்சிலுள்ள மண்டல பிஷப் பங்களாவுக்கு சென்ற ஒரு தரப்பினர், பிஷப் திமோத்தி ரவீந்தரிடம், தலைமையாசிரியர் பணியிடம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.அப்போது, ஏற்பட்ட தகராறில், திருச்சபை பொறுப்பு செயலாளர் சாம்ராஜ்,43, தாக்கப்பட்டார். இவர் கொடுத்த புகாரின் பேரில், பிரின்ஸ் எர்னஸ்ட், 41, ஜான்கமலேஷ்,34, பாதிரியார் கவிராஜ் ஜார்ஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


திருமண்டல கல்வி குழு கன்வீனர் கொடுத்த புகாரின் பேரில், பிஷப் திமோத்தி ரவீந்தர், 60, உட்பட ஏழு பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை, தேடி வந்த நிலையில், போலீசில் சிக்காமல் தலைமறைவானார். இந்நிலையில், திமோத்தி ரவீந்தர், சென்னை ஐகேர்ட்டில் முன்ஜாமின் பெற்றார்.கீழ் கோர்ட்டில் ஆஜராகி, ஜாமின் பெற்றுக்கொள்ள ஐகோர்ட் உத்தரவிட்டது.அதன் பேரில், கோவை ஜே.எம்:3, மாஜிஸ்திரேட் வேலுச்சாமி முன்னிலையில், பிஷப் திமோத்தி ரவீந்தர் நேற்று சரணடைந்தார். பின, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X