| 'வழுக்குகிறது' வெண்டைக்காய் விலை! விரக்தியின் உச்சத்தில் விவசாயிகள் Dinamalar
'வழுக்குகிறது' வெண்டைக்காய் விலை! விரக்தியின் உச்சத்தில் விவசாயிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
01:02

பேரூர்:வெண்டைக்காய் விலை கிலோ, ஏழு ரூபாயாக வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.தொண்டாமுத்துார் வட்டாரத்தில் நரசீபுரம், செம்மேடு, ஆலாந்துறை, தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 200 ஏக்கர் அளவில், வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.அறுவடை செய்யப்படும் வெண்டைக்காய், பூலுவப்பட்டி, தொண்டாமுத்துார், காளம்பாளையம் மற்றும் நகர்புறங்களில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.


கடந்த மாதத்தில், ஒரு கிலோ, வெண்டைக்காய், ரூ. 30 - 40 வரை விற்கப்பட்டது. இதன் விலை மெல்ல சரிந்து நேற்று, ஒரு கிலோ, 7 - 15 ரூபாய்க்கு விற்கப்பட்டதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


விவசாயி விஜயக்குமார் கூறுகையில், ''வெண்டைக்காய்க்கு கடந்த மாதத்தில் நல்ல விலை கிடைத்தது. தற்போது, விலை சரிந்து, 7 - 15க்கு கொள்முதலாகிறது. கிலோ,ரூ.20க்கு விற்றால் மட்டுமே கட்டுபடியாகும். இதே போன்று, சின்ன வெங்காயத்துக்கும் விலையில்லை. தக்காளி மட்டும் கை கொடுத்து வருகிறது. தேர்தல்முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், காய்கறிகளின் விலை, சிறிது சிறிதாக உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X