வெற்றி!! காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் ... என்.ஆர்.காங்., தொண்டர்கள் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 மே
2019
01:49
பதிவு செய்த நாள்
மே 24,2019 01:04

புதுச்சேரி:புதுச்சேரி லோக்சபா தொகுதியில், காங். வேட்பாளர் வைத்திலிங்கம், என்.ஆர்.காங். வேட்பாளரைவிட ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.


புதுச்சேரி லோக்சபா தொகுதி தேர்தலில், காங்., வேட்பாளராக வைத்திலிங்கம், என்.ஆர்.காங்., வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி, மக்கள் நீதி மையம் சார்பில் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், நாம் தமிழர் கட்சி ஷர்மிளா பேகம், அ.ம.மு.க., சார்பில் தமிழ்மாறன் உட்பட 19 பேர் போட்டியிட்டனர்.கடந்த ஏப்.18ம் தேதி நடந்த தேர்தலில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 325 ஓட்டுகள் பதிவாகின. ஓட்டு எண்ணிக்கை, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று நடந்தது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதில் வைத்திலிங்கம் 335 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகித்தார். அவரையடுத்து டாக்டர் நாராயணசாமி 112 ஓட்டுக்களும், சுப்ரமணியன் 22 ஓட்டுக்களும், ஷர்மிளா பேகம் 15 ஓட்டுக்களும் பெற்றனர்.அதனைத்தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் வைத்திலிங்கம் 63,884 ஓட்டுக்களும், இரண்டாவது சுற்றில் 58,376 ஓட்டுக்களும், 3வது சுற்றில் 42,331 ஓட்டுக்கள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.இவருக்கு அடுத்தபடியாக, என்.ஆர்.காங். வேட்பாளர் டாக்டர் நாராயணசாமி, முதல் சுற்றில் 34782 ஓட்டுக்களும், 2வது சுற்றில் 30383 ஓட்டுக்களும், 3வது சுற்றில் 21593 ஓட்டுக்களும் பெற்று, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷர்மிளா பேகம், மூன்று சுற்றுக்களில் முறையே 3230, 2778, 1748 என ஓட்டுக்கள் பெற்றார். அ.ம. மு.க., தமிழ்மாறன், மூன்று சுற்றுக்களிலும் முறையே 514, 550, 309 என ஓட்டுக்களை பெற்றார்.மாலையில், மூன்று சுற்றுக்களின் முடிவில், காங், வேட்பாளர் வைத்திலிங்கம் 3,25,119 ஓட்டுக்களும், என்.ஆர்.காங்., நாராயணசாமி 1,73,841 ஓட்டுக்களும், மக்கள் நீதி மையம் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் 26,102 ஓட்டுக்களும், பெற்றிருந்தனர். ஷர்மிளா பேகம் -15,568 ஓட்டுகளும்; தமிழ்மாறன் 2,935 ஓட்டுக்களும் பெற்று பின் தங்கியுள்ளனர். நேற்றிரவு 9.40 மணி நிலவரப்படி காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 013 ஓட்டுகளும், என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி 2 லட்சத்து 34 ஆயிரத்து 684 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். வைத்திலிங்கம் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 329 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.இதனால், வெற்றி நமதே என அதீத நம்பிக்கையில் இருந்த என்.ஆர்.காங்., தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-மே-201910:48:22 IST Report Abuse
Bhaskaran புதுவையில் அதிமுகவே கிடையாது ஐயா பின் எங்கிருந்து வாக்கு கிடைக்கும் எதோ அலை அடித்தால் உண்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X