| என்.ஆர்.காங்., கட்சிக்கு படுதோல்வி ஏன் Dinamalar
என்.ஆர்.காங்., கட்சிக்கு படுதோல்வி ஏன்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
01:07

புதுச்சேரி:புதுச்சேரியில் நடந்து முடிந்த லோக்சபா மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்., கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.


இந்த தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டிய நிர்பந்தத்திற்கு, என்.ஆர்.காங்., கட்சி தள்ளப்பட்டுள்ளது.காங்., கட்சி சார்பில், புதுச்சேரி முதல்வராக பதவி வகித்த ரங்கசாமி, கோஷ்டி பூசல் காரணமாக கடந்த 2011ம் ஆண்டு கட்சியில் இருந்து விலகி, என்.ஆர்.காங்., கட்சியை துவக்கினார். கட்சி துவக்கிய 3 மாதத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சிக் கட்டிலில் ஏறினார்.தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த ரங்கசாமி, அதன்பின், தனது என்.ஆர்.காங். கட்சியை பலப்படுத்தவில்லை. கட்சியில் முக்கிய தலைவர்களுக்கு எந்த பொறுப்பும் வழங்காமல், ரங்கசாமிக்கு மட்டுமே கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் கட்சிக்கு ஏராளமான தொண்டர்கள் இருந்தாலும், தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.இதன் எதிரொலியாக, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் என்.ஆர்.காங்., கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ரங்கசாமியின் கோட்டையாக திகழ்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி, இடைத்தேர்தலில் தி.மு.க.விடம் பறிபோனது. தட்டாஞ்சாவடி, கதிர்காமம், இந்திரா நகர் ஆகிய தொகுதிகளில்கூட, கடந்த தேர்தல்களில் என்.ஆர்.காங்., கட்சிக்கு கிடைத்த ஓட்டுகளை விட, தற்போது குறைந்த ஓட்டுதான் கிடைத்துள்ளது.


கடந்த லோக்சபா தேர்தலை போல், இந்த முறையும் என்.ஆர்.காங்., வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் அக்கட்சியினர் இருந்தனர். ஆனால், தேர்தல் முடிவு, அதற்கு மாறாக அமைந்து விட்டது.ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில நிமிடத்திலேயே, காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை பெற்றார். அதன்பின், ஒரு முறை கூட என்.ஆர்.காங்., வேட்பாளரால் முன்னிலைக்கு வர முடியவில்லை. கடைசி வரை காங்., வேட்பாளர் வைத்திலிங்கமே முன்னிலையில் இருந்தார்.பிரசார வியூகம்காங்., நிர்வாகிகள், கும்பல் கும்பலாக பிரசாரத்தில் ஈடுபடாமல், முக்கிய நிர்வாகிகள் தனித்தனியாக பிரசாரம் செய்தனர். மாநில காங். தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி, வேட்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோர், தனித்தனியாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.அதுமட்டுமின்றி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், காங்., மேலிடப் பார்வையாளர் சஞ்சய்தத் உள்ளிட்டோர் காங்., வேட்பாளருக்காக பிரசாரம் செய்தனர்.ஆனால், என்.ஆர்.காங்., கட்சிக்கு ஆதரவாக பெரிய தலைவர்கள் யாரும் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி மட்டுமே பிரசாரம் செய்தார்.அவரும், வழக்கம்போல டென்னிஸ் விளையாடிவிட்டு, பிரசாரத்திற்கு தாமதமாக சென்று, கட்சியினரையும் வாக்காளர்களையும் வெறுப்பில் ஆழ்த்தினார்.என்.ஆர்.காங்., கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் ஆகியோரை சந்தித்து, கட்சியில் சேர்த்தார் ரங்கசாமி. ஆனால், கடைசி நேரத்தில் கூட்டணி கட்சியினருக்கே ரங்கசாமி முக்கியத்துவம் அளித்தார். இது, கட்சியில் மீண்டும் இணைந்தவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X