| புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 16 பேர் டெபாசிட் இழப்பு Dinamalar
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 16 பேர் டெபாசிட் இழப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
01:16

புதுச்சேரி:புதுச்சேரி லோக்சபா தொகுதியில், அ.ம.மு.க. உட்பட 16 பேர் டெபாசிட் இழந்தனர்.


தேர்தலில், ஒரு தொகுதியில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டு பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படும். அதற்கும் குறைவான ஓட்டுகளை பெறும் வேட்பாளர் டெபாசிட் தொகை, அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும்.புதுச்சேரி லோக்சபா தொகுதி தேர்தலில், 7 லட்சத்து 95 ஆயிரத்து 325 ஓட்டுகள் பதிவானது. இதில் ஆறில் ஒரு பங்கு என்பது, 1 லட்சத்து 32 ஆயிரத்து 554 ஓட்டுகள் ஆகும்.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 18 பேர் போட்டியிட்டனர். பதிவானதில், ஆறில் ஒரு பங்குக்கும் அதிகமான ஓட்டு பெற்ற காங்., என்.ஆர்.காங்., வேட்பாளர் நாராயணசாமி, டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டார்.பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பதிமராஜ், மக்கள் நீதி மையம் வேட்பாளர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன், அ.ம.மு.க. வேட்பாளர் தமிழ்மாறன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷர்மிளாபேகம், புதுச்சேரி வளர்ச்சி கட்சி, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் எட்டு சுயேச்சைகள் உட்பட 16 பேர் டெபாசிட் தொகையை பறிகொடுத்தனர்.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட, வேட்பு மனு தாக்கல் செய்ய ரூ. 25 ஆயிரம் 'டெபாசிட்' தொகை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X