| கள்ளக்காதலியை தாக்கியவர் கைது Dinamalar
கள்ளக்காதலியை தாக்கியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
02:03

விழுப்புரம்:ஆரோவில் அருகே கள்ளக்காதலியை தாக்கிய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


சென்னை பாடிகுப்பத்தைச் சேர்ந்த சரவணன் மனைவி லதா, 27; இவர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சரவணன் இறந்து விட்டார். இதையடுத்து, லதாவிற்கும், வானுார் அடுத்த கோட்டக்கரையை சேர்ந்த கவிதாசன், 22; என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனிடையே, இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த 14ம் தேதி கவிதாசன் அழைத்ததால், லதா கோட்டக்கரைக்கு வந்தார். அங்கு, கவிதாசன் மற்றும் அவரது நண்பர் பூந்துறையை தமிழரசன், 24; ஆகியோர் லதாவிடம் தகராறு செய்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின்பேரில், கவிதாசன், தமிழரசன் மீது ஆரோவில் போலீசார் வழக்குப்பதிந்து கவிதாசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X