| பச்சைவாழியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா Dinamalar
பச்சைவாழியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
02:06

திண்டிவனம்:திண்டிவனம் பாங்கொளத்துார் பச்சைவாழியம்மன் கோவில் தீ மிதி விழா வரும் 28ம் தேதி நடக்கிறது.


திண்டிவனம், பாங்கொளத்துார் கிராமத்தில் உள்ள மன்னாத சுவாமி சமேத பச்சைவாழியம்மன் கோவில் பிரமோற்சவ விழா வரும் 26ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, அன்று காலை 7:30 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.27ம் தேதி மதியம் 12:00 மணிக்கு வாழ்முனீஸ்வரருக்கு பாத பூஜை. சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 8:00 மணிக்கு ராதாருக்மணி பாண்டுரங்க குழுவினரின் கோலாட்ட பஜனையும் நடக்கிறது. இரவு 11:00 மணிக்கு பச்சைவாழியம்மன், வாழ்முனீஸ்வரர் வரலாறு வில்லுபாட்டு மூலம் விளக்கப்பட உள்ளது.தொடர்ந்து 28ம் தேதி காலை 7:00 மணிக்கு தீ மிதி உற்சவமும்; 8:00 மணிக்கு வசந்த உற்சவமும் நடக்கிறது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X