கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி பருத்தி வார சந்தையில் ஓராண்டில் 21 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆண்டுதோறும் பருத்தி வார சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பருத்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடலுார், சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் பலர் கள்ளக்குறிச்சியில் நடக்கும் பருத்தி வார சந்தைக்கு பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
.டிசம்பர் முதல் ஜூன் வரை பருத்தி அறுவடைக்காலம் என்பதால் அதிகப்படியான வரத்து இருக்கும். அதன்படி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் 2019 மார்ச் 31ம் தேதி வரை நடந்த பருத்தி சந்தையில் 15 ஆயிரத்து 66 விவசாயிகள் கொண்டு வந்த 48 ஆயிரத்து 875 குவிண்டால் எடை கொண்ட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 684 மூட்டை பஞ்சு மூட்டைகள் 21 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.