பறிபோனது! விழுப்புரத்தில் பா.ம.க.,வின் வெற்றி...ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பறிபோனது! விழுப்புரத்தில் பா.ம.க.,வின் வெற்றி...ஒருங்கிணைப்பு இல்லாததே காரணம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
02:11

தேர்தல் பணிகளை முழுவதுமாக அ.தி.மு.க., வினர் வசம் ஒப்படைத்தது, பா.ம.க., நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் தராதது உள்ளிட்ட காரணங்களால் விழுப்புரம் தொகுதியில் பா.ம.க., தோல்வியை தழுவியது.


பா.ம.க.,வின் கோட்டையாக கருதப்படும், விழுப்புரம் லோக்சபா தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக வடிவேல் ராவணன் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கினார். அவரை எதிர்த்து பா.ம.க.,வின் நேர் எதிரியான வி.சி., கட்சியின் வேட்பாளராக ரவிக்குமார், தி.மு.க., கூட்டணியில் களமிறங்கினார்.கூட்டணி முடிவாகி தொகுதி பங்கீடு முடிந்த கையோடு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அமைச்சர் சண்முகத்தை அழைத்து தேர்தல் பணிகளை முழுமையாக அவரிடம் ஒப்படைத்தார்.செயல்வீரர்கள் கூட்டத்தில் ராமதாஸ் பேசம்போது, விழுப்புரம் தொகுதியை அமைச்சர் சண்முகத்திடம் ஒப்படைத்து விட்டேன்.


இத்தொகுதியில் பா.ம.க., வெற்றி பெறுவதில் சந்தேகம் இல்லை என பகிரங்கமாக அறிவித்தார்.இதனால், உற்சாகமடைந்த அ.தி.மு.க.,வினர், அமைச்சர் சண்முகம் தலைமையில் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை துவக்கினர். இருந்தபோதும், அ.தி.மு.க., வினருக்கும், பா.ம.க., நிர்வாகிகளுக்கும் சரியான ஒருங்கிணைப்பு இல்லை.தலைவர்கள் வருகை, பொதுக்கூட்டம் உள்ளிட்ட விவரங்கள் கூட பா.ம.க.,வின் முக்கிய நிர்வாகிகளுக்கு தெரியவில்லை. இதனால், பா.ம.க.,வினர் தேர்தல் பணிகளில் முழு மூழ்ச்சுடன் ஈடுபட முடியவில்லை.தேர்தல் பணிகளை அ.தி.மு.க.,வினர் பார்த்துக்கொள்வார்கள் என்ற மன நிலைக்கு பா.ம.க.,வினர் வந்தனர். இதுவும் தோல்விக்கு காரணமானது. வன்னியர் உள்ளிட்ட மாற்று சமுதாயத்தினரின் ஓட்டுகளை ஒட்டு மொத்தமாக அள்ளி விடலாம் என்ற பா.ம.க.,வினரின் கணக்கும், வி.சி., கட்சியின் வியூகத்தால் பொய்த்துப்போனது.வி.சி., கட்சியைப் பொறுத்தவரை தங்கள் சின்னத்திற்கு பதிலாக, மக்கள் மத்தியில் பிரபலமான தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். வி.சி., தரப்பினர் சிறு, சிறு விஷயங்களைக் கூட அலட்சியப்படுத்தாமல் தேர்தல் பணியில் தீவிரம் காட்டினர்.இதற்கிடையே, தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். இதனால், ஆரம்பத்தில் விழுப்புரம் தி.மு.க.,வினர் கவுதம சிகாமணிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற கள்ளக்குறிச்சிக்கு படையெடுத்தனர்.


இது குறித்து, வி.சி., கட்சியினர், தி.மு.க., தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், விழுப்புரம் தி.மு.க.,வினரை அழைத்து டோஸ் விட்டார்.அதனைத் தொடர்ந்து, தி.மு.க.,வினர் விழுப்புரம் தொகுதியில் தேர்தல் பணியில் பம்பரமாக சுழன்றனர். அதற்கு தகுந்தாற்போன்று, வி.சி., மற்றும் தி.மு.க., வினரின் தீவிர உழைப்பால் அனைத்து தரப்பினர் ஓட்டுகள் ரவிக்குமாருக்கு கிடைத்தது.இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகம் முழுவதும் வீசிய, ஆளும் கட்சியான அ.தி.மு.க., விற்கு எதிரான அலைக்கு விழுப்புரம் தொகுதியும் தப்பவில்லை.


நமது நிருபர்-

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X