| விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாருக்கு சான்றிதழ்  Dinamalar
விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாருக்கு சான்றிதழ் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
02:12

விழுப்புரம்:விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்ற வி.சி.,வேட்பாளர் ரவிக்குமாருக்கு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.


விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 068 ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இறுதி சுற்று முடிந்தவுடன் ஒட்டு எண்ணும் மையத்திலிருந்து வெளியே சென்ற ரவிக்குமார், ஆதராளவர்கள் நடத்திய வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்றார். பின்னர், மீண்டும் ஒட்டு எண்ணும் மையத்திற்கு ரவிக்குமார் திரும்பினார். விவிபாட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ணும் பணி நடந்த கொண்டிருந்ததால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஒட்டு எண்ணும் மையத்தில் காத்திருந்தார். பின்னர், 11.30 மணியளவில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை ரவிக்குமாரிடம், மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சுப்ரமணியன் வழங்கினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X