| மதுரையில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி Dinamalar
மதுரையில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
02:18

மதுரை : மதுரை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை, அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த போது, தபால் ஓட்டுக்கள் பதிவு செய்ததில் குளறுபடிகள் நடந்ததாக,வேட்பாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் தபால் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. தேர்தல் பார்வையாளர் வினோத்குமார், தேர்தல் அதிகாரி நாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் எண்ணிக்கை தொடர்ந்தது.மதுரை லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை அரசு மருத்துவக் கல்லுாரியின் பிரதான கட்டடத்திலும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பார்மசி துறை கட்டடத்திலும் நடந்தன. ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்கனவே பெண் தாசில்தார் சம்பூரணம் நுழைந்ததில் சர்ச்சை எழுந்தது. இதனால் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முதலில் தபால்ஓட்டுக்கள் பாதுகாப்பு அறையிலிருந்து கொண்டுவரப்பட்டு எண்ணப்பட்டன. அப்போது தேனி தொகுதிக்குரிய தபால் ஓட்டு இங்கு மாறிவந்துவிட்டதாக ம.நீ.ம.,-அ.ம.மு.க.,வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் குற்றம் சாட்டினர்.ம.நீ.ம.,வேட்பாளர் அழகரின் ஏஜன்ட் சரவணன் கூறுகையில், ''தேனி தொகுதிக்குரிய தபால் ஓட்டு இங்கு எப்படி வந்தது என்பதற்கு அதிகாரிகள் சரியாக விளக்கம் அளிக்கவில்லை.சில தபால் ஓட்டுக்களில் கையெழுத்து மாறுபட்டிருந்தால், அவற்றை செல்லாததாக அறிவிக்கக் கோரியதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை,'' என்றார். தபால் ஓட்டுப் பெட்டிகள் திறந்த நிலையில் கொண்டுவரப்பட்டு, எண்ணப்படுவதாக பா.ஜ., நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். மேலும் 3 தபால் ஓட்டுக்களில் கையெழுத்துக்கள் மாறுபட்டிருந்ததால், அவற்றை செல்லாத ஓட்டாக அறிவிக்கக்கோரி கட்சிகளின் ஏஜன்ட்கள் குற்றம் சாட்டினர்.இதனால் தபால்ஓட்டுக்கள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.வேட்பாளர்கள் ராஜ்சத்யன் (அ.தி.மு.க.,), வெங்கடேசன் (மார்க்சிஸ்ட்) மற்றும் கட்சிகளின் ஏஜன்ட்களுடன் தேர்தல் பார்வையாளர் வினோத்குமார், மாவட்ட தேர்தல் அதிகாரி நாகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர்.2 மணி நேர தாமதத்திற்கு பின் தபால் ஓட்டுக்களை எண்ணும் பணி துவங்கியது. மொத்தம் 5,751ஓட்டுக்கள் இருந்தன. அதன் முடிவு, பிறகுஅறிவிக்கப்படும் எனஅதிகாரிகள் தெரிவித்தனர்.ஓட்டு எண்ணிக்கையில் துவக்கம் முதலே மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். சட்டசபை தொகுதி வாரியாக அவருக்கு கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்தன.
அ.தி.மு.க., ஓட்டுக்களை அதிகம் பிரிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அ.ம.மு.க.,வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, ம.நீ.ம.,வேட்பாளர் அழகரைவிட குறைந்த ஓட்டுக்கள் பெற்றார். திருப்பரங்குன்றத்தில் தாமதம்*திருப்பரங்குன்றம்சட்டசபை தொகுதி 17 வது சுற்றில், 267 வதுபூத்திற்குரிய 2 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்பட்டன. அவை திடீரென பழுதாகின. இதனால் ஓட்டு எண்ணும் பணி பாதித்தது. அதை தவிர்த்து மற்றஓட்டுக்களை எண்ண அதிகாரிகள் முடிவு செய்தனர்.ஆனால், அந்த இயந்திர ஓட்டுக்களை எண்ணுமாறு அ.தி.மு.க.,ஏஜன்ட்கள் தெரிவித்தனர்.யாருக்கு ஓட்டளித்தோம் என அறியும்'விவிபேட்'கருவியில்பதிவான ஓட்டுக்களை கணக்கிட்டு, சேர்த்துக் கொண்டனர். இதனால் முடிவு அறிவிப்பதில்தாமதம் ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X