| சிதம்பரத்தில் திருமாவளவன் முன்னிலை Dinamalar
சிதம்பரத்தில் திருமாவளவன் முன்னிலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
02:23

சிதம்பரம்:சிதம்பரம் லோக்சபா தொகுதியில், 24வது சுற்று முடிவில், வி.சி. கட்சி வேட்பாளர் திருமாவளவன், அ.தி.மு.க.. வேட்பாளரை விட 3,120 ஓட்டுக்கள் அதிகம் பெற்று, முன்னிலையில் இருந்தார்.


சிதம்பரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் சந்திரசேகர், வி.சி. கட்சி சார்பில் கட்சியின் தலைவர் திருமாவளவன், உள்ளிட்ட 13 பேர் போட்டியிட்டனர். இத்தொகுதியில், மொத்தமுள்ள 14,79,108 ஓட்டுகளில், 11,49,538 ஓட்டுகள் பதிவானது.ஓட்டு எண்ணிக்கை, அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா, தத்தனுாரிலுள்ள மீனாட்சி ராமசாமி அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று காலை 8.00 மணிக்கு துவங்கியது.இரவு 1.40 மணியளவில், 24வது சுற்று ஓட்டு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. இதில், வி.சி. கட்சி திருமாவளவன் 4,98,147 ஓட்டுக்களும், அ.தி.மு.க.,வேட்பாளர் சந்திரசேகர் 4,95,027 ஓட்டுக்களும் பெற்றிருந்தனர். திருமாவளவன் 3,120 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று, முன்னிலை வகித்தார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X