லோக்சபா தேர்தலில் குஜராத், ஆந்திரா, அருணாச்சல், சண்டிகர், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ, ஹரியானா, ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர், லட்சத்தீவு, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, டில்லி, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 18 மாநில/யூனியன் பிரதேசங்களில் காங்., ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.* பா.ஜ., வை பொறுத்தவரை அந்தமான், ஆந்திரா, தாத்ரா நகர் ஹவேலி, கேரளா, தமிழகம், லட்சத்தீவு, மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, சிக்கிம் என 10ல் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
-பா.ஜ.. நுாறு சதவீத வெற்றிலோக்சபா தேர்தலில் குஜராத் (26), ராஜஸ்தான் (25), ஹரியானா (10), டில்லி (7), உத்தரகாண்ட் (5), ஹிமாச்சல் (4), திரிபுரா (2), அருணாச்சல பிரதேசம் (2), சண்டிகார் (1), டாமன் டையு (1) என 10 மாநில/யூனியன் பிரதேசங்களில் அனைத்து இடங்களிலும் பா.ஜ., வென்றது.* காங்.,கை பொறுத்தவரை அந்தமான் நிகோபர் தீவுகள்(1), லட்சத்தீவு(1), புதுச்சேரி(1) என மூன்று யூனியன் பிரதேசங்களில் முழுமையாக வென்றது.--------------------