352 தொகுதிகள்: வென்றார் மோடி
நாடு முழுதும் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் தகர்த்தெறிந்து எதிர் கட்சிகளின் பகீரத முயற்சிகளை முறியடித்து தனிப்பெறும் கட்சியாக பா.ஜ. 303 தொகுதிகளில் வென்றுமத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது.
@Image@
அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் புடின் உட்பட உலக நாட்டு தலைவர்கள் அனைவரின் பாராட்டுகளோடு ஆட்சி கட்டிலில் மீண்டும் அமர போகிறார் நரேந்திர மோடி. லோக்சபாவின் மொத்தமுள்ள 545 தொகுதிகளுள் 542 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 352 தொகுதிகளை அறுதிப் பெரும்பான்மையில் பா.ஜ. கூட்டணி
வென்றுள்ளது. ஏற்கனவே உள்ள பா.ஜ., ஆட்சி மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தலை சந்தித்த காங்கிரஸ் வெறும் 53 இடங்களைவென்று பிரதமர் பதவிப் போட்டியில் பெரும் தோல்வி அடைந்துள்ளது. அக்கூட்டணி 91 இடங்களை பெற்றுள்ளது. பிரதமர் பதவி ஏற்பு விழாவும் அமைச்சரவை பதவியேற்பும் எப்போது என்பது ஓரிருநாளில் தெரியவரும்.
37 தொகுதிகள்: சாதித்தார் ஸ்டாலின்
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது தி.மு.க., கூட்டணி. அக்கூட்டணியே எதிர்பாராத வகையில் 38 தொகுதிகளுள்37 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது. காங். கூட்டணியுடன் களம் கண்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தன்னை எதிர்த்து பா.ஜ. கூட்டணியுடன் போட்டியிட்ட அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி கட்சியின் கவுரவத்தை
மீட்டெடுத்து கட்சிக்கு புதுதெம்பை வரவழைத்துள்ளார். ஜெ. மறைவுக்கு பின் சந்தித்த முதல் லோக்சபா தேர்தலிலேயே அ.தி.மு.க. வரலாறு காணாத வகையில் ஜெ. வென்றெடுத்த அனைத்து தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணிக்கு தாரைவார்த்து விட்டது.இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட உதிரிக் கட்சிகளான அ.ம.மு.க., மக்கள் நீதி மையம் நாம் தமிழர் ஆகியவை ஒரு தொகுதியை கூட வெல்ல முடியாமல் பெரும் தோல்வியை தழுவி விட்டன. இக்கட்சிகள் மூன்றும் சொற்ப அளவில் ஓட்டுகளை பெற்று அரசியலில் அ... ஆ... எழுத துவங்கியுள்ளன.