| ம.பி.,யில் சுருண்டது காங்கிரஸ் Dinamalar
ம.பி.,யில் சுருண்டது காங்கிரஸ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
02:37

போபால், :லோக்சபா தேர்தலில், ம.பி., மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. இங்கு, மொத்தமுள்ள, 29 தொகுதிகளில், பா.ஜ., 28 இடங்களிலும், காங்., ஒரே ஒரு இடத்தையும் பிடித்துள்ளது.ம.பி., மாநிலத்தில், கடந்த ஆண்டு, நவம்பர், டிசம்பரில், சட்டசபை பொதுத் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 230 தொகுதிகளில், காங்., 114 தொகுதிகளிலும், பா.ஜ., 109 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. ஆளும் பாரதிய ஜனதாவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், காங்கிரஸ் ஆட்சியமைக்க முயன்றது.இதன் பின், பகுஜன் சமாஜ் கட்சியின், இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், சமாஜ்வாதி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., நான்கு சுயேச்சைகள் ஆதரவுடன், காங்., ஆட்சி அமைத்தது. முதல்வராக கமல்நாத் பதவியேற்றார். இதனால், லோக்சபா தேர்தலில், காங்., அதிக தொகுதிகளை கைப்பற்றும் என, எதிர்பார்க்கப்பட்டது.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள, 29 தொகுதிகளில், பா.ஜ., 26 இடங்களிலும், காங்., மூன்று தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது. சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்., வலுப்பெற்றதால், 2019 லோக்சபா தேர்தலிலும், அக்கட்சி அதிக இடங்களில் வெற்றியை எதிர்பார்த்தது. ஆனால், இந்த தேர்தலில், காங்., படுதோல்வியை சந்தித்துள்ளது.இந்நிலையில், லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மத்திய பிரதேசத்தில், துவக்கம் முதலே, பா.ஜ.,வுக்கு வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறியது. மொத்தமுள்ள, 29 தொகுதிகளில், 28 இடங்களில், பா.ஜ., முந்தியது.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போபால் தொகுதியில், பா.ஜ., வேட்பாளர், பிரக்யா சிங் தாக்குரிடம், காங்., மூத்த தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான, திக்விஜய் சிங், இரண்டு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.குவாலியர் அரச வம்சத்தை சேர்ந்தவரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, ஜோதிராதித்யா சிந்தியா, குனா தொகுதியில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.லோக்சபா தேர்தலில் படுதோல்வியடைந்தையடுத்து, இம்மாநிலத்தில், கமல்நாத் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே, சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, முதல்வர் கமல்நாத்துக்கு உத்தரவிட வேண்டும் என, கவர்னர் ஆனந்திபென் படேலுக்கு, பா.ஜ., கோரிக்கை விடுத்தது. அதனால், லோக்சபா தேர்தல் முடிவுகளால், கமல்நாத் அரசுக்கு நெருக்கடி உருவாகி உள்ளது.2019 தேர்தல் முடிவுகள்மொத்த தொகுதிகள் - 29கட்சி - வெற்றி - முன்னிலை - மொத்தம்பா.ஜ., - 17 - 11 - 28காங்., - 1 - 0 - 1-----2014 தேர்தல் முடிவுகள்பா.ஜ., - 26காங்., - 3

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X