| கடலாடியில் கம்பீர குரலில் கலக்கும் உமையொரு பாதம் Dinamalar
கடலாடியில் கம்பீர குரலில் கலக்கும் உமையொரு பாதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 மே
2019
23:07

கடலாடி : நாடக கலையின் மீது கொண்டுள்ள தணியாத தாகத்தால்,முதுமையால் தள்ளப்பட்டாலும் இன்றும் இளமையாக நாடக வசனங்களை உச்சரித்து கம்பீரமான குரலில் கலக்கி வருகிறார் உமையொரு பாதம் 75.



கடந்த காலங்களில் கோயில் விழா, கும்பாபிஷேகம், முளைக்கொட்டு உள்ளிட்ட விஷேச காலங்களில் பிரதானமாக நாடகங்கள் இடம்பெறும். ''நாடு செழிக்க வேணும், நல்ல மழை பெய்ய வேணும். ஊரு செழிக்க வேணும், உலக மக்கள் வாழவேணும்,''என்ற பொதுநல சிந்தனைகளையும், இயற்கை, விவசாயத்தின் மீது மாறாத பற்றினை மக்களிடம் விளக்கி சொல்வது நாடகக்கலையின்முக்கிய அம்சமாக திகழ்கிறது.தான் மட்டும் நன்றாக இயிருந்தால் போதாது. ஊரு செழித்தால், அதையொட்டிகலைஞர்களும் செழிப்பார்கள் என்ற வாழ்வியல் தத்துவத்தை போதிக்கிறது. நாடகத்திற்காக அரிதாரம் பூசிய முகங்கள் இன்று டி.வி., சினிமா, கம்ப்யூட்டர் உலகம் என்ற புதிய பரிணாமத்தில்நுழைந்து வருகிறது.



கடலாடி ஆசாரி மேலத்தெருவை சேர்ந்த 75 வயதாகும் நாடக நடிகர் உமையொரு பாதம் கூறுவதை இனி கேட்போம்...எனது 12 வயதில் இருந்து நடித்து வருகிறேன்.கதையின் நாயகனாக நடிப்பவர்களுக்குநன்றாக பாடவும், நடனமாடவும், கத்திச்சண்டை போடவும்,வீர வசனம் பேசவும், என அனைத்து திறமைகளையும் வைத்திருக்க வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் பகதுார் வெள்ளையத்தேவன்வேடத்தை பல ஆண்டுகளாக பிரதானமாக செய்து வருகிறேன்.பவளக்கொடி, அல்லி அர்ஜுனா, வள்ளி திருமணம், அரிச்சந்திரா உள்ளிட்ட புராண நாடகங்களில் துணை நடிகராகவும்நடித்துள்ளேன்.அரிதாரம் (மேக்கப்)நானே பூசிக்கொண்டு நடிப்பேன்.



கமுதியில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். தற்போது முன்பு போல் நாடக வாய்ப்பு இல்லை.ஓய்வு நேரத்தில் வீணாக பொழுதை கழிக்காமல் கார்பென்டர் (மரத்தச்சு) வேலை செய்து வருகிறேன்.மானமும், வீரமும் செறிந்த எங்கள் தமிழ் மண்ணில் ஆங்கிலேயரின் (பரங்கிப்படை)பொம்மலாட்டம் எங்களிடம் பலிக்காது, என்ற வீரவசனத்துடன்நடந்து சென்றார். இவரை பாராட்ட.. 82201 67651.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X