பரமக்குடியில் கைத்தறி சேலைகளுக்கு மவுசு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2019
23:09

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கைத்தறி சேலைகளுக்கு என்றுமே மவுசு அதிகம். அந்த வகையில் காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம் சேலைகளுக்கு இணையாக தரமாக விளங்குகிறது. இப்பகுதியில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தறி மேடை அமைத்து பாரம்பரிய தொழிலாக கைத்தறி சேலைகளை நெய்கின்றனர். ஆரம்ப காலம் தொட்டு ஜக்காட் பெட்டிகள் எனப்படும் மெஷின் மூலம் டிசைன்களை கொண்டு வருகின்றனர். இதன் மூலம் நாம் கொடுக்கும் எந்த டிசைன்களையும் சேலையில் உருவாக்கி விடுவர்.இந்நிலையில், தற்போது எலக்ட்ரானிக் ஜக்காட் எனப்படும் மெஷின்கள் புதிய வரவாக வந்துள்ளன.




முன்பு டிசைன்களைப் பொறுத்து பல ஆயிரம் அட்டைகளை ஜக்காட் மெஷினில் பொருத்தி பயன்படுத்தும் நிலை இருந்தது. தற்போது எலக்ட்ரானிக் மிஷின் மூலம் நேரடியாக பென்டிரைவ்களில் ஆயிரக்கணக்கான டிசைன்களை ஒரே நேரத்தில் புகுத்தி நாம் நினைத்து பார்க்க முடியாத வகையில் சேலைகளில் பல வித புதுமைகளை படைக்க முடியும், என்கின்றனர் நெசவாளர்கள்.



ஆனால் இதற்கு கூடுதல் செலவு மற்றும் இட வசதியுடன் மின்சாரத் தேவை அதிகம் என்பதால் பயன்படுத்துவதில் பொருளாதார சிக்கல் இருப்பதாக தெரிகிறது. எது, எப்படியோ முன்பு பம்பர் மற்றும் பட்டு நெசவில் மட்டுமே உருவங்களை புகுத்திய நிலையில் தற்போது நுால் சேலைகளிலும் இத்தகைய மெஷின்களால் உருவங்களை உருவாக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X