ரயில் படிக்கட்டு அத்துமீறல் அதிகரிப்பு: பயணத்தில் ஆபத்தோடு விளையாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
00:00

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில், படிக்கட்டில் நின்றபடி பயணம் மேற்கொள்ளும் ஆபத்தான பழக்கம் அதிகரித்துள்ளது.பொள்ளாச்சி வழித்தடத்தில், பாலக்காடு - சென்னை, திருவனந்தபுரம் - மதுரை, பொள்ளாச்சி - கோவை, மதுரை - கோவை, பாலக்காடு - திருசெந்துார் ரயில்கள் இயங்குகின்றன.


இந்த ரயில்களில், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.ரயில்களில் சீட்டு விளையாடுவது, பிற பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் சப்தமாக பாட்டு கேட்பது, புகைப்பிடிப்பது, 'சீட்' பிடிப்பதற்காக தகராறில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்க, ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.அத்துமீறும் பயணிகள் மீது அவ்வப்போது அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.சில பயணிகள் விதிகளை மதிக்காமல், அத்துமீறுவது தொடர்கிறது.


குறிப்பாக, நகரும் ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்தவாறு பயணிப்பது, படிக்கட்டில் நின்று பயணிப்பது என 'திரில்' ஆன, ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.ரயில்வே விதிகளின் படி தவறு என்பது மட்டுமின்றி, ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தால் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.எனவே, ரயில் பயணிகள் படிக்கட்டில் நின்று, அமர்ந்து பயணிப்பதை தவிர்க்க வேண்டும். ரயில்வே போலீசார், கண்காணிப்பில் ஈடுபட்டு அத்துமீறலை கட்டுப்படுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X