அரசு பணிக்கு பின் ஆன்மிகப் பணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
00:14

எரியோடு : அரசு பணி ஓய்வுக்கு பின் ஓய்வு எடுக்கிறேன் என வீட்டிலே இருக்காமல், எரியோடு பகுதியை சேர்ந்த பலர் ஆன்மிக பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குண்டாம்பட்டி ராமகிருஷ்ணன் 89, எரியோடு மாரிமுத்து 70, துாங்கணம்பட்டி பழனிச்சாமி 78, நல்லமனார்கோட்டை சுந்தரராஜ் 77, அம்மாபட்டி புதுார் நவநீதபாலகிருஷ்ணன் 74, அச்சனம்பட்டி பழனிச்சாமி 70, ஸ்ரீராமபுரம் தங்கவேல் 70 ஆகியோர் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.



இவர்கள் ஏழு பேரும் மேலும் பலரை ஒருங்கிணைத்து எரியோட்டில் ''திருஅருள்பேரவை'' என்ற ஒரு சத்சங்கத்தை துவங்கி ஆன்மிகப் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் 30 கி.மீ., துாரத்திற்குட்பட்ட பெருமாள் கோயில்களுக்கு ஏராளமான பக்தர்களுடன் யாத்திரை செல்கின்றனர். பஜனை, பக்தி இன்னிசை, பக்திச் சொற்பொழிவு, நாமாவளிப் பாராயணம் போன்ற நிகழ்வுகளை நடத்துகின்றனர்.



துவக்கத்தில் பிரபலமாகாத கோயில்களை கண்டறிந்து முன்னுரிமை தந்து புரட்டாசி யாத்திரை சென்றனர். இதன் பயனாக அவற்றில் பல கோயில்கள் தற்போது புத்துயிர் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு பழநி பாதயாத்திரை பக்தர்களுக்காக தைப்பூசத்திற்கு இரு நாட்களுக்கு முன் எரியோட்டில் பாத, மருத்துவ, அன்னதான சேவை வழங்குகின்றனர். சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் ஊர் பிரமுகர்களின் அழைப்பில் சென்று பஜனை, சொற்பொழிவுகளும் நடத்தி வருகின்றனர். இக்குழுவினரை வாழ்த்த 95438 40958 என்ற எண்ணை 'டயல்' செய்யலாம்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X