| பாதுகாப்பான படிக்கட்டு அமைப்பது எப்படி Dinamalar
பாதுகாப்பான படிக்கட்டு அமைப்பது எப்படி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2019
00:21

கட்டுமானங்களில் படிக்கட்டுகள் அமைப்பது முக்கிய பணியாகும். ரோட்டிலிருந்து வீட்டுக்குள் செல்வது, தரை தளத்திலிருந்து மேல் தளங்களுக்கு செல்வது என பல இடங்களுக்கு படிக்கட்டுகள் அவசியம். இந்த படிக்கட்டுகளை உருவாக்க கட்டுமான திட்டத்தில் பல நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. ஆனால், பெரும்பாலான கட்டுமானங்களில் இந்த நடைமுறைகள் சரியாக பின்பற்றுவதில்லை.படிகள் பிரதான வழித்தடம்மொட்டை மாடியாக இருந்தாலும், 20 வீடுகள் கொண்ட மேல் தளங்களாக இருந்தாலும் படிக்கட்டுகள் தான் பிரதான வழித்தடம் என்பதை புரிந்து கொண்டு, கட்டுமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.



அடுக்குமாடி கட்டடங்களை பயன்படுத்துவோர் பல்வேறு உடல்வாகு உள்ளவராக இருப்பர். அதனால் மனிதர்களின் உடல் அமைப்பு, பாதங்களின் அளவு குறித்து கட்டுமான நிறுவனங்கள் கவனிக்க வேண்டும்.மாடிப்படிகள் அமைக்கும் போது அதில் கால் வைத்து ஏறும் பகுதியின் அகலம், உயரத்தை தீர்மானிப்பதில் துல்லியமாக கவனம் செலுத்த வேண்டும். படிக்கட்டுகளில் கால் வைக்கும் இடத்தின் அகலம், உயரம் பயன்படுத்துவோருக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.கால் வைக்கும் இடம்கட்டுமான தொழில்நுட்ப நடைமுறையின்படி மாடிப்படிகளில் கால் வைக்கும் இடம் ஒரு அடிக்கு குறையாத அகலம், உயரம்த்திலும் இருக்க வேண்டும்.



இதில், அனைத்து படிகளும் ஒரே மாதிரி உயரத்தில் மட்டுமே இருக்க வேண்டும். சில கட்டடங்களில் மேலிருந்து கீழே இறங்கும் போது, அனைத்து படிகளும் ஒரே உயரத்தில் இருக்கும் கடைசி படி மட்டும் ஒரு அங்குலம் கூடுதல் உயரத்தில் அல்லது குறைவான உயரத்தில் இருக்கும்.இப்படி இருந்தால் இந்த படிகளை பயன்படுத்துவோர் நிலைதடுமாறி கீழே விழ வாய்ப்பு உள்ளது. இதே போல படியில் பாதம் வைக்கும் இடத்தின் அகலம் குறைந்தாலும் பயன்படுத்துவோர் நிலை தடுமாறுவர். எனவே, அனைத்து படிகளையும் துல்லியமாக கணக்கிட்டு பாதுகாப்பாக அமைக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X