| கோவை தொழில் துறைக்கு... எதிர்காலம் பிரகாசம்! Dinamalar
கோவை தொழில் துறைக்கு... எதிர்காலம் பிரகாசம்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2019
01:16

கோவை:மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், கோவை தொகுதியில் மா.கம்யூ., கட்சியின் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றிருக்கிறார்.


இதனால், கடந்த காலங்களில் கோவை தொழில் துறையின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் தொடருமா, தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என்ற கேள்விகள், தொழில் துறையினர் சிலரிடம் ஏற்பட்டுள்ளன.


மற்றொரு தரப்பினரோ, எந்த கட்சியின் கோரிக்கையாக இருந்தாலும், கோவையின் வளர்ச்சிக்கு பா.ஜ., அரசு உதவும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.கோவை தொழில் அமைப்பினர் சிலரிடம் பேசியபோது, 'மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் எம்.பி., கோவையில் இருந்தால்தான், தொழில் துறையினரின் கோரிக்கைகளை, மத்திய அரசின் பார்வைக்கு அவர் மூலம் எடுத்து சென்று நிறைவேற்றிக்கொள்ள முடியும்.


கோவையில் பா.ஜ.,வின் சி.பி.ராதாகிருஷ்ணன் வென்றிருந்தால், நம்மூருக்கு மேலும் பல திட்டங்களை கொண்டு வந்திருக்க முடியும்.மா.கம்யூ.,வின் நடராஜன் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், எங்களின் பிரச்னைகளை யார் மூலம் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது, எங்கள் கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்பது புரியவில்லை. டில்லியில் கோவை தொழில் துறையினருக்கு மரியாதை கிடைக்குமா என்றும் தெரியவில்லை. கோவைக்கான மத்திய அரசின் திட்டங்களும் தொடருமா என்றும் புரியவில்லை' என்று புலம்பினர்.


அதே சமயத்தில் கோவை மாவட்ட வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாக தயாரிப்பாளர் சங்க (கவுமா) தலைவர் சாஸ்தா ராஜா கூறும் கருத்து, அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல் உள்ளது.அவர் கூறியதாவது:பா.ஜ., அரசை பொறுத்தவரையில் கட்சி பாகுபாடு பார்ப்பதில்லை. கடந்த முறை, அ.தி.மு.க., எம்.பி., இருந்தபோதுதான், கோவைக்கு ஏகப்பட்ட திட்டங்களை கொண்டு வந்தது. அதுபோல், இப்போது மா.கம்யூ., எம்.பி., இருக்கும்போதும், நிறைய திட்டங்களை கொண்டு வரும். யார் எந்த கோரிக்கையை கொண்டு சென்றாலும் நிறைவேற்றுவார்கள்.


வெட்கிரைண்டர்களுக்கான ஜி.எஸ்.டி.,யை ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, பா.ஜ., வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வைத்திருந்தோம். இப்போது அதே கோரிக்கையை, கோவை எம்.பி., நடராஜனிடம் வைக்கிறோம். மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.நல்லது நடக்கும் என்று நம்புவோம்!

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X