| 'சவால்கள், தடைகளை சமாளிக்க தயாராகணும்' Dinamalar
'சவால்கள், தடைகளை சமாளிக்க தயாராகணும்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2019
01:17

கோவை:நேரு இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 9வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.இதில், 2018ம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு முடித்த, 273 மாணவர்களுக்கு, பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.டில்லி தேசிய தரமதிப்பீட்டு அமைப்பு தலைவர் அகர்வால், பட்ட சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில், ''போட்டிமிகு இவ்வுலகில் தன்னம்பிக்கையுடன், கடின உழைப்பும் அவசியமாகிறது. சவால்களையும், தடைகளையும் எதிர்கொள்ளும் அளவுக்கு, நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் இன்றைய உலகை வழிநடத்தி செல்கின்றன,'' என்றார்.நேரு கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ், செயலாளர் கிருஷ்ணகுமார், முதல்வர் மணியரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X