சக்கைப்போடு! நகர ஊரமைப்புத்துறையில் 'வசூல்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
02:14

அன்னுார்:அங்கீகாரமற்ற மனைகளை வரன்முறை படுத்த டி.டி.சி.பி.,(நகர ஊரமைப்பு துறை) அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதால் அன்னுார் மக்களும், நில விற்பனையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், பத்து லட்சத்துக்கும் அதிகமான அங்கீகாரமற்ற மனையிடங்கள் உள்ளன.


தமிழக அரசு, 2017, மே 4ம் தேதி வெளியிட்ட உத்தரவில், '2016, அக். 20க்கு முன் உருவான அங்கீகாரமற்ற மனையிடங்கள், 'லே அவுட்' கள் ஆகியவற்றை உரிய ஆவணங்களுடன், 'ஆன் லைன்' முறையில் விண்ணப்பித்து, அங்கீகார கட்டணம், அபிவிருத்தி கட்டணம் செலுத்தி வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்,' என அறிவித்தது. வரன்முறைப்படுத்த நான்கு முறை மக்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது.இதையடுத்து, அங்கீகாரமற்ற மனையிடங்களில், 30 சதவீத மனைகள் வரன்முறைப் படுத்தப்பட்டன. 70 சதவீத மனையிடங்கள் வரன்முறைப்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. ஏனென்றால் நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை பிரித்து மனை அமைத்து விற்பனை செய்யலாம்.என்று திட்டமிட்டு உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகளை சந்தித்தால், நிலத்தை வரன்முறைப்படுத்தி தருவதற்கு பல லட்சங்கள் செலவாகும். என்று டி.டி.சி.பி. அதிகாரிகள் கூறுவதோடு, கனிசமான தொகையை லஞ்சமாக கேட்கின்றனர். நில உரிமையாளர்கள் அதிகாரிகள் கேட்கும் தொகையை கொடுக்க முடியாமலும், நிலத்தை அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவாக மாற்றவும் முடியாமலும் உரிமையாளர்கள் திண்டாடுகின்றனர்.இது குறித்து அன்னுார் பகுதி நில உரிமையாளர்கள் கூறியதாவது:அன்னுார் வட்டாரத்தில், 300க்கும் மேற்பட்ட அங்கீகாரமில்லாத 'லே-அவுட்'கள் உள்ளன. இவற்றில், 10 முதல் 30 சதவீதம் மனைகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. விற்காமல் உள்ள சைட்டுகளுக்கு அங்கீகாரம் பெற கோவையில் உள்ள டி.டி.சி.பி., அலுவலகத்தில் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்தே விண்ணப்பிக்கிறோம்.விண்ணப்பம் தந்தவுடன், அலுவலகத்தில் உள்ளவர்கள், ஒருவரின் தொலைபேசி எண்ணை கொடுக்கின்றனர். ஒரு டோக்கனில், டி.டி.சி.பி., விண்ணப்ப எண்ணை எழுதி தருகின்றனர். அந்த நபரிடம் அந்த டோக்கனை தரும்படி சொல்கின்றனர். அவரை சந்தித்து டோக்கனை தந்தால், ஒரு சதுரடிக்கு, ஏழு ரூபாய் கணக்கிட்டு தொகை தரும்படி கூறுகிறார். நமது லே- அவுட்டில், 1,500 சதுரடி உள்ள 20 சைட்டுகள் விற்கப்படாமல் இருந்தால், 30 ஆயிரம் சதுரடிக்கு, இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அவரிடம் தர வேண்டும்.


இதையடுத்து, சில நாட்களில் அவர் டி.டி.சி.பி., அலுவலகத்திற்கு ஒப்புதல் தருகிறார். இதை தொடர்ந்து நாம், அங்கீகார கட்டணமாக, ஒரு சதுரடிக்கு ஐந்து ரூபாய் வீதம், ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதன் பிறகே, விற்கப்படாமல் உள்ள சைட்டுகளுக்கு அங்கீகாரம் தரப்படுகிறது. அதுவும் பேரூராட்சியாக இருந்தால், ஒரு சதுரடிக்கு அங்கீகார கட்டணமாக, 10 ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது.


இந்நிலையில் ஒரு சைட்டுக்கு, அங்கீகார கட்டணம், 7,500 ரூபாய் போக, லஞ்சமாக, 10 ஆயிரத்து 500 ரூபாய் தர வேண்டி உள்ளது.இது நில உரிமையாளர்களுக்கு மிகவும் சிரமம் தருகிறது. மாமூல் இல்லாமல், சைட்டுகளுக்கு அங்கீகாரம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நில உரிமையாளர்கள் கூறுகின்றனர்.


சப்பை கட்டு கட்டும் அதிகாரிநில உரிமையாளர்கள் மற்றும் புரமோட்டர்கள் சொல்லும் புகார் முற்றிலும் தவறானது. அங்கீகாரம் வழங்கும் பணியில் நான் தான் ஈடுபடுகிறேன். யாரிடமும் பணம் வாங்குவதில்லை. டி.டி.சி.பி., அலுவலகத்தில் யாராவது பணம் கேட்டிருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம். அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை தவிர வேறு எந்த தொகையும் செலுத்த வேண்டியதில்லை. அப்படி கூடுதல் தொகையோ, லஞ்சத்தொகையோ கேட்டால், லஞ்ச ஒழிப்புத்துறையிலோ, என்னிடமோ, மாவட்ட நிர்வாகத்திடமோ புகார் தெரிவிக்கலாம். கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர ஊரமைப்பு துறை மண்டல துணை இயக்குனர் மதிவாணன் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X