| பரஞ்ஜோதி மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம் Dinamalar
பரஞ்ஜோதி மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2019
02:14

பெ.நா.பாளையம்:கவுண்டம்பாளையம் அருள்மிகு பரஞ்ஜோதி மாரியம்மன் திருக்கோவிலில், 11ம் ஆண்டு பூச்சாட்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா நடந்தது.விழாவையொட்டி, கணபதி ஹோமம், கம்பம் நடுதல், பூச்சட்டி எடுத்து கம்பம் சுற்றி ஆடுதல், அம்மனுக்கு அலங்கார பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு சீர் தட்டு எடுத்து வருதல், அம்மன் அழைத்தல் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சக்தி கரகம், கவுண்டம்பாளையம் ஸ்ரீ ராஜமகா கணபதி கோவிலில் இருந்து ராமுகுட்டி லே-அவுட், உடையார் காலனி, தாமரை நகர் வழியாக கோவிலை அடைந்தது. இதில், பெண்கள், 20 அடி அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.தொடர்ந்து அலங்கார பூஜை, அன்னதானம் நடந்தது. மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து வருதல், வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X