அடிப்படை வசதி இல்லாத அம்மா பூங்கா : அவதியில் சேரன் நகர் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
02:16

மேட்டுப்பாளையம்:புதிதாக திறக்கப்பட்ட அம்மா பூங்காவுக்கு மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க சேரன் நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரமடை பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட சேரன் நகரில், 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள காலியிடத்தில் ஊராட்சி சார்பில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. இதில் சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டன.இவற்றோடு இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், உடற்பயிற்சி உபகரணங்கள் அடங்கிய கூடமும் கட்டப்பட்டது. அடிப்படை வசதிகள் செய்யும் முன்பே, பூங்காவை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. போதுமான வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.இது குறித்து சேரன் நகர் பகுதி மக்கள் கூறியதாவது: பூங்காவை குழந்தைகளும், பெண்களும், மூத்தகுடிமக்களும் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். அதனால் மின்சார வசதி இல்லை. அதனால் இரவு, 8:00 மணி வரை நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமலும், குழந்தைகள் விளையாட முடியாமலும் அவதிப்படுகின்றனர். பூங்காவில் உள்ள கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி இல்லாததால், பயன்படுத்த முடியாமல் உள்ளது.மின்வசதி இல்லாததால், உடற்பயிற்சி கூடம் பூட்டியே கிடக்கிறது. பூங்கா இருந்தும் மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது. அடிப்படை வசதிகளை விரைவில் செய்து கொடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர்.இது குறித்து பெள்ளாதி ஊராட்சி செயலர் சுரேஷ்குமார் கூறுகையில்,' பூங்கா திறந்தவுடன் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தண்ணீர், மின்சாரம் ஆகிய வசதிகள் செய்ய முடியவில்லை. தேர்தல் முடிந்ததால், விரைவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்,' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X