புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் அமைகிறது புதிய சாலை! செங்குன்றம் - சடையங்குப்பம் செல்ல வசதி-
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 மே
2019
04:03
பதிவு செய்த நாள்
மே 25,2019 02:50

நமது நிருபர் -புழல் ஏரி, உபரிநீர் கால்வாயின், இரண்டு பகுதிகளிலும், சாலை அமைக்கும் பணியை, பொதுப்பணித் துறை துவங்கிஉள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.


இந்த ஏரியில் சேமிக்கப்படும் நீரை வைத்து, சென்னையின் மூன்று மாத குடிநீர் தேவையை, பூர்த்தி செய்ய முடியும்.சாகுபடிவடகிழக்கு பருவமழையால், புழல் ஏரிக்கு அதிகளவில் நீர் கிடைக்கிறது. மழைக்காலங்களில், ஏரி நிரம்பும் போது, அவற்றில் இருந்து உபரிநீரை வெளியேற்ற வசதியாக, செங்குன்றம் முதல் சடையங்குப்பம் வரை, 8 கி.மீ.,க்கு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.


செங்குன்றம், தண்டல்கழனி, காவாங்கரை, வடப்பெரும்பாக்கம், கொசப்பூர், ஆமுல்லைவாயில் வழியாக, இந்த கால்வாய் பயணிக்கிறது.கால்வாயின் பெரும்பகுதி, சென்னையின் விரிவாக்க எல்லைக்குள் உள்ளது. இந்த கால்வாயை பயன்படுத்தி, பல ஆண்டுகளுக்கு முன், நெல், வெற்றிலை, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.ஒதுக்கீடுதற்போது, அவை வீட்டு மனைகளாக உருமாறியுள்ளன.


உபரிநீர் கால்வாயின் கரைகளை, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன.சீரழிந்து கிடந்த இந்த கால்வாயை புனரமைக்க, அரசு, 9.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, கால்வாயை புனரமைக்கும் பணிகள், இரண்டு மாதங்களாக நடந்து வருகின்றன.இப்பணியின் போது, கால்வாயில் ஆக்கிரமிப்புகள் மட்டுமின்றி, சென்னை விரிவாக்க பகுதிகள், கிராண்ட்லைன், வடகரை ஊராட்சி, செங்குன்றம் பேரூராட்சி ஆகியவற்றின் கழிவுநீர் கலப்பதும் கண்டறியப்பட்டது.


இந்தநடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என, மாநகராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பொதுப்பணித்துறை வாயிலாக கடிதம் எழுதப்பட்டு உள்ளது.இதற்கு உரிய பதிலை, உள்ளாட்சி அமைப்புகள் இன்னும் வழங்கவில்லை. இதனிடையே, புனரமைப்பு பணியின் ஒரு பகுதியாக, உபரிநீர் கால்வாயின் இரண்டு பகுதிகளிலும், செம்மண் சாலை அமைக்கும் பணியை, பொதுப்பணித் துறை ஒப்பந்த நிறுவனம் துவங்கி உள்ளது.தடுக்கப்படும்ஆய்வுக்கு வரும் அதிகாரிகளின் வாகனங்கள் செல்வதற்காக, இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சாலை அமைப்பு பணிகள் முடிவடைந்தால், இதன் வழியாக, இருசக்கர வாகன ஓட்டிகள் செங்குன்றம் முதல் சடையங்குப்பம் வரை, எவ்வித போக்குவரத்து நெரிசலும் இன்றி பயணிக்க முடியும்.வரும் காலங்களில், கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களும் பயணிக்க வாய்ப்புகள் உருவாகும்.


இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கால்வாயின் இருபுறங்களிலும், சாலை அமைப்பதால், வரும் காலங்களில், ஆக்கிரமிப்புகள் உருவாவது முற்றிலும் தடுக்கப்படும்.பரிந்துரைகால்வாய்க்குள், கழிவுநீர் வெளியேற்றுவதை முற்றிலும் நிறுத்திவிட்டால், சுற்றுப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்னைக்கு, தீர்வு கிடைக்கும்.தடுப்பணைகள் கட்டப்படும் பட்சத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் தேவையை தீர்க்க முடியும்.


இதுகுறித்து, வரும் காலங்களில், அரசுக்கு பரிந்துரைக்க உள்ளோம்.கால்வாயை, ஆமுல்லை வாயிலில் இருந்து ஒரு கி.மீ.,க்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு சொந்தமான நிலத்தை வழங்கும்படி, கடிதம் எழுதப்பட்டுள்ளது.ஒப்புதல் கிடைத்த பின், பணிகள் தீவிரம் அடையும். ஒரு மாதத்திற்குள், இந்த பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X