| தெருவிளக்கு பராமரிப்பில் மெத்தனம் Dinamalar
தெருவிளக்கு பராமரிப்பில் மெத்தனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2019
03:00

சிட்லபாக்கம்: தெருவிளக்குகள் பராமரிப்பில், பேரூராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சிட்லபாக்கம் பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.பேரூராட்சிக்குட்பட்ட, சுபாஷ் சந்திரபோஸ் தெரு, பொன்னியம்மன் நகர், 1 - 12 தெருக்கள், ராமகிருஷ்ணாபுரம், 3வது பிரதான சாலை. மேலும், திருமுருகன் சாலை, கலைவாணர் தெரு, சேதுநாராயணன் தெரு, மறைமலை அடிகளார் தெரு மேற்கு பகுதி, பாம்பன் சாமிகள் தெரு உட்பட பல பகுதிகளில், தெரு விளக்குகள், 50 சதவீதம் எரிவதில்லை.இதை பயன்படுத்தி, சமூக விரோதிகள், அடிக்கடி திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். மூன்று மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் இப்பிரச்னை குறித்து, பேரூராட்சி அதிகாரிகளிடம், புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X