வடசென்னையில் அனைவரும், 'டிபாசிட்' காலி ஏன்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
03:12

வடசென்னை லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வின் அழகாபுரம் மோகன்ராஜ்; தி.மு.க.,வின், கலாநிதி வீராசாமி; அ.ம.மு.க.,வின் சந்தான கிருஷ்ணன்; மக்கள் நீதி மையத்தின் மவுரியா; நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் என, 23 பேர் போட்டியிட்டனர்.மொத்தம், 9 லட்சத்து, 55 ஆயிரத்து, 931 ஓட்டுகள் பதிவாகின. கலாநிதி வீராசாமி, 5 லட்சத்து, 90 ஆயிரத்து, 986 ஓட்டுகள் பெற்றார்.அழகாபுரம் மோகன்ராஜ், 1 லட்சத்து, 29, ஆயிரத்து, 468 ஓட்டு; மவுரியா, 1 லட்சத்து, 3,167 ஓட்டு பெற்றனர். காளியம்மாள், 60, ஆயிரத்து, 515; சந்தான கிருஷ்ணன், 33, ஆயிரத்து, 277 ஓட்டு பெற்றனர்.இதில், 4 லட்சத்து, 61 ஆயிரத்து, 518 ஓட்டுகள் வித்தியாசத்தில், கலாநிதி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, 22 பேரும், 'டிபாசிட்' இழந்தனர்.தி.மு.க.,விற்கு பிரதான போட்டியாக, தே.மு.தி.க., இருந்தது. ஆனால், அக்கட்சி வேட்பாளர், அழகாபுரம் மோகன்ராஜ், துவக்கம் முதலே, தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டவில்லை.தேர்தல் வேலை செய்ய முன் வந்த, அ.தி.மு.க.,வினரையும், அவர் ஒதுக்கியதால், அனைவரும் மோகன்ராஜை புறக்கணித்தனர்.பணமும் செலவு செய்யாததால், பெரும்பாலானஓட்டுச்சாவடியில், முகவர் கூட நியமிக்கப்படவில்லை. அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், அவர் நடந்து கொண்ட மோசமான அணுகுமுறையால், அ.தி.மு.க.,வினரே அவருக்கு ஓட்டு போடவில்லை.இந்த தொகுதியில், அ.தி.மு.க., போட்டியிட்டு இருந்தால், தி.மு.க.,வின் வெற்றி வித்தியாசம் குறைந்திருக்குமே தவிர, பாதித்திருக்காது.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல்கள் இருந்தும், அதை சமாளித்து, நிர்வாகிகளை ஒருங்கிணைந்து, அரவணைத்து சென்றதால், தி.மு.க.,வினர் ஓட்டு சிதறாமல் பார்த்துக் கொண்டனர்.அ.ம.மு.க., வேட்பாளர், சந்தானகிருஷ்ணன் புதிய முகம்; தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர். இவரது பரிசுபெட்டி சின்னம், வடசென்னை மக்களிடம் சென்றடையவில்லை.இரவு, பகலாக பிரசாரம் செய்து, பணத்தை வாரி இறைத்தும், இவரால், ஓட்டுகளை பெற முடியவில்லை. காளியம்மாளை விட, குறைவான ஓட்டுகளை பெற்றுள்ளார்.அ.தி.மு.க., - - தி.மு.க., விற்கு மாற்றாக ஓட்டு போட வேண்டுமென என எண்ணிய, வடசென்னை இளைஞர்கள் பெரும்பாலானோர், மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஓட்டளித்து உள்ளனர். இதனால், மவுரியா, ஒரு லட்சத்திற்கும் மேலான ஓட்டுகளை பெற்றுள்ளார்.


- நமது நிருபர் -

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X