திரிசூலம் திரிசூலநாதர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
03:13

சென்னை: திரிசூலம் மலை மீது அமைந்துள்ள, திரிசூலநாதர் கோவிலுக்கு சொந்தமான, 80 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, நம் நாளிதழ் வெளியிட்ட செய்தி எதிரொலியாக, கோவில் செயல் அலுவலர்,பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மின்வாரியம், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பிலும், விசாரணை துவக்கப்பட்டுள்ளது.சென்னை, விமான நிலையம் எதிரில் உள்ள, திரிசூலம் மலையில், திரிசூலநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 80 ஏக்கர் பட்டா நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது தொடர்பாக, நம் நாளிதழ், படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியிட்டது.இதன் காரணமாக, கோவில் நிலத்தை விற்பனை செய்து வந்தவர்கள், பீதியில் தலைமறைவாகினர். மனைகளை வாங்கியவர்கள், செய்வதறியாது தவித்து வருகின்றனர்.மின்வாரியத்தின் சார்பில், முறைகேடாக வழங்கப்பட்ட மின் இணைப்புகள், அதை வழங்கிய அதிகாரிகள் மீது, விசாரணை துவக்கப்பட்டுள்ளது.ஊராட்சி சார்பில், கோவில் நிலத்திற்கு வரி போட்டு கொடுக்கப்பட்டுள்ளது குறித்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், விசாரணை துவக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த விவகாரத்தில், அறநிலையத் துறையின் நடவடிக்கையாக, திரிசூலநாதர் கோவில் செயல் அலுவலர், சத்தியநாராயணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.திருநீர்மலை, நீர்வண்ணப் பெருமாள் கோவில் செயல் அலுவலர், சக்தி, இக்கோவில் செயல் அலுவலர் பொறுப்பை, கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.கோவில் நிலத்தை மீட்பதற்கான முழு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
25-மே-201915:52:19 IST Report Abuse
Darmavan இதே போல்திருநீர்மலை பெருமாள் கோயில் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.அதைப்பற்றி தினமலர் இது போற விரிவான ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X