10 மாதத்திற்கு பின் விரைவு மின்சார ரயில், கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
03:33

சென்னை: கடற்கரை - செங்கல்பட்டு இடையே, பத்து மாதங்களுக்கு பின், மீண்டும், விரைவு புறநகர் மின்சார ரயில் வரும், ஜூன், 1ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.செங்கல்பட்டில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, ஆறு விரைவு புறநகர் மின்சார ரயில்களும்; கடற்கரை நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டுக்கு, மூன்று விரைவு புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வந்தன.இந்த ரயில்கள், கடற்கரை - தாம்பரம் இடையே குறிப்பிட்ட நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இதனால், இந்த ரயில்களில், சென்னை பயணியரை விட, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு பகுதி மக்கள், அதிகம் பயணம் செய்வர்.கடந்தாண்டு, ஜூலை, 24ல், திருமால்பூருக்கு இயக்கப்பட்ட மின்சார ரயில், பரங்கிமலைநிலையத்தில், விபத்தில் சிக்கியதில், ஐந்து பேர் பலியாகினர்.பிளாட்பார பாதுகாப்பு சுவருக்கும், தண்டவாளத்துக்கும் இடையே, போதிய இடைவெளி இல்லாததால், ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தோர், விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது.பாதுகாப்பான பாதையாக, மாற்றி அமைக்கும் வரை, இப்பாதையில், விரைவு புறநகர் மின்சார ரயில்கள் இயக்கக் கூடாது என, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் உத்தரவிட்டார்.இதையடுத்து நடந்த, பாதை சீரமைக்கும் பணி, கடந்தாண்டு நவம்பரில் முடிந்தும், விரைவு புறநகர் மின்சார ரயில்கள், மீண்டும் இயக்கப்படவில்லை.ஆத்திரமடைந்த, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு பயணியர், அதிகாரிகளை கண்டித்து, ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இது குறித்து, நம் நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியானது.இதையடுத்து, விரைவு புறநகர் மின்சார ரயில்கள், ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்படும் என, ரயில்வே அறிவித்துள்ளது.விரைவு ரயில்களின் நேர விபரம் செங்கல்பட்டில் இருந்து, காலை, 7:50 மணிக்கு இயக்கப்படும் ரயில், காலை, 9:15 மணிக்கு சென்னை கடற்கரை நிலையம் சென்றடையும் திருமால்பூரில் இருந்து, காலை, 7:05 மணிக்கு இயக்கப்படும் ரயில், செங்கல்பட்டு வழியாக, காலை, 9:30 மணிக்கு, கடற்கரை நிலையம் சென்றடையும் செங்கல்பட்டில் இருந்து, காலை, 8:05 மணி, 8:25 மணி, 8:50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், காலை, 9:47 மணி, 9:55 மணி, 10:20 மணிக்கு, கடற்கரை நிலையம் சென்றடையும் திருமால்பூரில் இருந்து, காலை, 8:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், காலை, 10:28 மணிக்கு சென்னை கடற்கரைநிலையத்துக்கும் சென்றடையும் கடற்கரை நிலையத்தில் இருந்து, மாலை, 6:13 மணிக்கு இயக்கப்படும் ரயில், இரவு, 8:40 மணிக்கு, திருமால்பூர் சென்றடையும்விரைவு புறநகர் மின்சார ரயில் நிறுத்தப்பட்டு, சாதாரண ரயில்களாக இயக்கப்பட்டபின், சென்னை எழும்பூர் - புதுச்சேரி விரைவு ரயில், கடற்கரை நிலையம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 1ம் தேதியில் இருந்து, எழும்பூர் - புதுச்சேரி இடையே மட்டும் இயக்கப்படும்.இந்த ரயில், புதுச்சேரியில் இருந்து, அதிகாலை, 5:35 மணிக்கு புறப்பட்டு, காலை, 9:30 மணிக்கு, எழும்பூர் வந்தடையும். எழும்பூரில் இருந்து, புதுச்சேரிக்கு, மாலை, 6:10 மணிக்கு புறப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X