| அ.தி.மு.க., பேனர் கிழிப்பு Dinamalar
அ.தி.மு.க., பேனர் கிழிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2019
03:37

பாண்டிபஜார்: எம்.ஜி.ஆர்., மன்றத்திற்கு முன் வைக்கப்பட்டிருந்த, 8 அடி பேனரை கிழித்து, எரித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, அ.தி.மு.க.,பிரமுகர், போலீசில் புகார் அளித்துள்ளார்.பாண்டிபஜார், சதாசிவம் தெருவில், எம்.ஜி.ஆர்., மன்றம் உள்ளது. மன்றத்திற்கு முன் வைக்கப்பட்டிருந்த பேனரை, நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கிழித்து, தீயிட்டு எரித்துச் சென்றனர்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாண்டிபஜார் காவல் நிலையத்தில், அ.தி.மு.க., தென் சென்னை வடக்கு மாவட்ட, எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகிகள் புகார் அளித்தனர். வழக்கு பதிந்த போலீசார், தி.மு.க., பிரமுகர்களான அய்யப்பன், உதயா ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X