பெரம்பூர் தொகுதி முன்னாள், எம்.எல்.ஏ.,படுதோல்வி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
03:38

வியாசர்பாடி: பெரம்பூர் தொகுதி முன்னாள், எம்.எல்.ஏ., வெற்றிவேல், மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று, ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, படுதோல்வி அடைந்தார்.பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஆர்.எஸ்.ராஜேஷ்; தி.மு.க., சார்பில், ஆர்.டி.சேகர்; அ.ம.மு.க., சார்பில், வெற்றிவேல்; மக்கள் நீதி மையம் சார்பில், பிரியதர்ஷினி; நாம் தமிழர் கட்சி சார்பில், மெர்லின் சுகந்தி உள்ளிட்ட, 40 பேர் போட்டியிட்டனர்.இதில், மொத்தம், ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து, 408 ஓட்டுகள் பதிவாகின. அதில், ஆர்.டி.சேகர், ஒரு லட்சத்து, 6,394; ஆர்.எஸ்.ராஜேஷ், 38 ஆயிரத்து, 371; பிரியதர்ஷினி, 20 ஆயிரத்து,508; மெர்லின் சுகந்தி, 8,611 ஓட்டுகளை பெற்ற நிலையில், வெற்றிவேல்; 6,281 ஓட்டுகளை மட்டுமே பெற்று, படுதோல்வி அடைந்தார்.தொகுதி எம்.எல்.ஏ.,வான வெற்றிவேல், மக்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் செய்யாதது மற்றும் தகுதி நீக்க நடவடிக்கை உள்ளிட்ட காரணங்கள், இவருக்கு பெரும் சரிவை கொடுத்துள்ளது.பெரம்பூரில், பெரிய அளவில் பிரசாரம் செய்யாத, மெர்லின் சுகந்தியை விடவும், வெற்றிவேல் குறைவான ஓட்டுகளை பெற்று, 'டிபாசிட்'இழந்தார்.தி.மு.க., வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு, உட்கட்சி பூசல்கள், அதிக அளவில் இருந்தாலும், அதை சமாளித்து, கம்யூனிஸ்ட் கட்சியினரை அரவணைத்து சென்றதும், அவருக்கு பலமாக அமைந்தது.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த பெரம்பூரை, 1996க்கு பின், மீண்டும், தி.மு.க., கைப்பற்றி சாதித்தது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-மே-201908:48:02 IST Report Abuse
Bhaskaran திமுகவின் கோட்டை சென்னை என்னும் மாயத்தோற்றத்தை உடைத்து எம்ஜியாரால் முடியாத சாதனையை செய்த ஜெயின் தொண்டர்களா இவர்கள் உண்மைத்தொண்டனின் சாபம் இவனையெல்லாம் ஒழிந்துவிடும் பதவியை அனுபவித்துவிட்டு காசுக்காக கட்சியை உடைத்து திமுகவிடம் கட்சியை தோற்கடிக்கவைத்த புண்ணிய ஆத்மாக்களை ஜெயின் ஆத்மா மன்னித்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டன் மன்னிக்க மாட்டான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X