| பெரம்பூர் தொகுதி முன்னாள், எம்.எல்.ஏ.,படுதோல்வி Dinamalar
பெரம்பூர் தொகுதி முன்னாள், எம்.எல்.ஏ.,படுதோல்வி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2019
03:38

வியாசர்பாடி: பெரம்பூர் தொகுதி முன்னாள், எம்.எல்.ஏ., வெற்றிவேல், மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று, ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, படுதோல்வி அடைந்தார்.பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஆர்.எஸ்.ராஜேஷ்; தி.மு.க., சார்பில், ஆர்.டி.சேகர்; அ.ம.மு.க., சார்பில், வெற்றிவேல்; மக்கள் நீதி மையம் சார்பில், பிரியதர்ஷினி; நாம் தமிழர் கட்சி சார்பில், மெர்லின் சுகந்தி உள்ளிட்ட, 40 பேர் போட்டியிட்டனர்.இதில், மொத்தம், ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து, 408 ஓட்டுகள் பதிவாகின. அதில், ஆர்.டி.சேகர், ஒரு லட்சத்து, 6,394; ஆர்.எஸ்.ராஜேஷ், 38 ஆயிரத்து, 371; பிரியதர்ஷினி, 20 ஆயிரத்து,508; மெர்லின் சுகந்தி, 8,611 ஓட்டுகளை பெற்ற நிலையில், வெற்றிவேல்; 6,281 ஓட்டுகளை மட்டுமே பெற்று, படுதோல்வி அடைந்தார்.தொகுதி எம்.எல்.ஏ.,வான வெற்றிவேல், மக்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் செய்யாதது மற்றும் தகுதி நீக்க நடவடிக்கை உள்ளிட்ட காரணங்கள், இவருக்கு பெரும் சரிவை கொடுத்துள்ளது.பெரம்பூரில், பெரிய அளவில் பிரசாரம் செய்யாத, மெர்லின் சுகந்தியை விடவும், வெற்றிவேல் குறைவான ஓட்டுகளை பெற்று, 'டிபாசிட்'இழந்தார்.தி.மு.க., வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு, உட்கட்சி பூசல்கள், அதிக அளவில் இருந்தாலும், அதை சமாளித்து, கம்யூனிஸ்ட் கட்சியினரை அரவணைத்து சென்றதும், அவருக்கு பலமாக அமைந்தது.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த பெரம்பூரை, 1996க்கு பின், மீண்டும், தி.மு.க., கைப்பற்றி சாதித்தது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X