எப்படி? 'குன்றம்' சட்டசபை கைநழுவியது ... கோட்டையை திமுக கைப்பற்றியது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 மே
2019
04:31
பதிவு செய்த நாள்
மே 25,2019 04:27

மதுரை : அ.தி.மு.க.,வின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியை 23 ஆண்டுகளுக்கு பின் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தி.மு.க., கைப்பற்றி ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.




இத்தொகுதியில் இதுவரை எட்டு முறை அ.தி.மு.க., வென்றுள்ளது. இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அ.தி.மு.க.,விற்கு 'நம்பர் ஒன்' சாதகமான தொகுதியாக சுட்டிக்காட்டப்பட்டதால் எளிதில் வென்று விடலாம் என ஆளும்கட்சியின் கணக்காக இருந்தது. தி.மு.க., சார்பில்

ஏற்கனவே தோல்வியுற்ற சரவணன் களம் கண்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் முனியாண்டியை வேட்பாளராக இறக்கியது அ.தி.மு.க., முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டும் 2,396 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் 'கோட்டை'யை தி.மு.க., விடம் பறிகொடுத்துள்ளது அ.தி.மு.க.,




இதற்கு முக்கிய காரணம் அ.தி.மு.க.,வின் ஓட்டுக்களை அ.ம.மு.க., வேட்பாளர் மகேந்திரன் அதிகளவில் பிரித்ததால் தான் என்கின்றனர் அக்கட்சியினர். முனியாண்டி பெற்ற 83,038 ஓட்டுக்களுடன் அ.ம.மு.க., பெற்ற 31,199 ஓட்டுக்களை சேர்த்தால் இங்கு அ.தி.மு.க., எளிதில் வென்றிருக்கும். அ.தி.மு.க.,விற்கு சாதகமான விரகனுார், சிலைமான், புளியங்குளம், சாமநத்தம், விராதனுார் பகுதிகளில் தி.மு.க., 2800 ஓட்டுக்கள் அதிகம் பெற்றது. அதுபோல் வளையங்குளம், நல்லுார், சோழங்குருணி பகுதிகளில் கடந்த தேர்தலில் தி.மு.க.,வை விட 7600 ஓட்டு பெற்றிருந்த நிலையில் இத்தேர்தலில் 800 ஓட்டுக்களே அதிகம் பெற்றது.




கைத்தறி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த தேர்தலில் 4 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகம் பெற்ற

அ.தி.மு.க., இத்தேர்தலில் 1400 மட்டுமே பெற்றிருந்தது. இதேநிலை தான் நகர் பகுதிகளிலும் காணப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் அ.தி.மு.க., கோட்டையாக இருந்த இத்தொகுதியை 1996க்கு (செ.ராமசந்திரன் வெற்றி பெற்றார்) பின் மீண்டும் தி.மு.க., கைப்பற்றியுள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X