| உலக ஹீமோபிலியா தினம் ஜிப்மரில் நாளை கொண்டாட்டம் Dinamalar
உலக ஹீமோபிலியா தினம் ஜிப்மரில் நாளை கொண்டாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2019
06:12

புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மரில் நாளை 26ம் தேதி ஹீமோபிலியா சங்க தலைவி டாக்டர் நளினியின் 75 வது பிறந்த நாள் விழா மற்றும் உலக ஹீமோபிலியா தினம் கொண்டாடப்படுகிறது.



புதுச்சேரி ஹீமோபிலியா சங்கம் துவங்கி 25 ஆண்டாகிறது. அதையொட்டி, நாளை 26ம் தேதி காலை 9:00 மணியளவில் ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல் கலாம் அரங்கத்தில் வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. நாற்பெரும் விழாவாக இது நடக்கிறது.டில்லி இந்திய ஹீமோபிலியா இணைய தலைவர் விகாஸ் கோயல் தலைமை தாங்குகிறார். முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷணாராவ், துணை சபாநாயகர் சிவகொழுந்து, முன்னாள் முதல்வர் ரங்கசாமி, சங்க புரவலர் ஜான்குமார் பங்கேற்கின்றனர்.மேலும், மருத்துவ வல்லுனர்களான ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால், சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், தேசிய சுகாதார சங்க டாக்டர் மோகன்குமார், ஸ்ரீ பாலாஜி வித்யா பீடம் துணைவேந்தர் சுபாஷ் சந்திர பரிஜா உரையாற்றுகின்றனர்.மதியம் நடக்கும் நிகழ்வில், ஹீமோபிலியா கூட்டமைப்பின் தென் பிராந்திய பிரதிநிதிகள் கூட்டம், பிரேம் ரூப் ஆல்வா தலைமையில் நடக்கிறது. 30 சங்கங்கள் பங்கேற்கின்றன.விழாவில், ஹீமோபிலியா சங்க தலைவி டாக்டர் நளினியின் 75 வது பிறந்த நாள் விழா, உலக ஹீமோபிலியா தினம் கொண்டாடப்படுகிறது. ஏ.வி.எம். திரைக்குடும்பத்தை சேர்ந்த அபர்ணா குகன் ஷ்யாம், பாடல் குழு 'ஜோ- -எச்2ஓ' பாண்ட் உள்ளிட் டோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.விழா ஏற்பாடுகளை சங்க தலைவர் வீரமணி, செயலர் பென்னோராயன், பொருளாளர் ஜெயபால் ஏற்பாடு செய்துள்ளனர்.விழாவில் பொதுமக்கள் திரளாக பங்கேற்கும்படி, சங்க தலைவி டாக்டர் நளினி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X