| கிளினிக்கில் 100 சவரன் திருட்டு: நர்சிடம் 65 பவுன் பறிமுதல் Dinamalar
கிளினிக்கில் 100 சவரன் திருட்டு: நர்சிடம் 65 பவுன் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 மே
2019
07:27

தஞ்சாவூர்: கும்பகோணம் கிளினிக்கில் திருட்டு போன 100 சவரன் நகைகளில் 65 சவரனை அங்கு வேலை பார்த்த நர்சிடம் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.



தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் 69; டாக்டரான இவர் செட்டிமண்டபத்தில் கிளினிக் வைத்துள்ளார். இந்த கிளினிக்கில் கீதா 35 என்பவர் நர்சாக இருந்தார்.மார்ச் 17ல் குடும்பத்துடன் கனடா சென்ற டாக்டர் செல்வராஜ் மே 22ம் தேதி இரவு திரும்பி வந்தார். கிளினிக்கில் வைத்திருந்த 100 சவரன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. கீதாவிடம் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கீதாவிடம் விசாரணை நடத்தி வந்தனர். அவரிடம் இருந்த 65 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மீத நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Advertisement
மேலும் தஞ்சாவூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X