அ.தி.மு.க., ஓட்டுக்களால் வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன்: ஆதாரத்துடன் புகார் அனுப்பியது பா.ம.க.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
08:16

அரக்கோணம்: அ.தி.மு.க., ஓட்டுக்களால், தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றது குறித்து விசாரணை நடக்கவுள்ளது.


வேலூர் மாவட்டம், அரக்கோணம் லோக்சபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன், பா.ம.க., வேட்பாளர் மூர்த்தி உள்பட, 19 பேர் போட்டியிட்டனர். ஜெகத்ரட்சகன், ஆறு லட்சத்து, 72 ஆயிரத்து, 190 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக மூர்த்தி, மூன்று லட்சத்து, 43 ஆயிரத்து, 234 ஓட்டுக்கள் பெற்றார். அரக்கோணம் லோக்சபா தொகுதியில், திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், மூன்று தொகுதிகளில், தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்களும், இரண்டில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். சோளிங்கர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.


அரக்கோணம் தொகுதி மொத்த வாக்காளர்கள், 14 லட்சத்து, 94 ஆயிரத்து, 929 பேர். இதில், 11 லட்சத்து, 79 ஆயிரத்து, 712 பேர் ஓட்டு போட்டனர். இங்கு வன்னியர், முதலியார், இஸ்லாமியர், தாழ்த்தப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர். கட்சி ரீதியாக பார்த்தால், அ.தி.மு.க.,வுக்கு நான்கு லட்சம், பா.ம.க.,வுக்கு, 3.50 லட்சம், தி.மு.க.,வுக்கு, மூன்று லட்சம், அ.ம.மு.க.,வுக்கு, 50 ஆயிரம் மற்றும் தாழ்த்தப்பட்ட, இஸ்லாமியர் ஓட்டுக்கள், மூன்று லட்சம் உள்ளன. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனியாகவும், பா.ஜ., - பா.ம.க., ஒரு கூட்டணியாகவும், காங்., - தி.மு.க., ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் அரி, நான்கு லட்சத்து, 93 ஆயிரத்து, 534 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். தோல்வியடைந்த, தி.மு.க., வேட்பாளர் இளங்கோ, இரண்டு லட்சத்து, 52 ஆயிரத்து, 768 ஓட்டுக்கள், பா.ம.க., வேலு, இரண்டு லட்சத்து, 33 ஆயிரத்து, 762 ஓட்டுக்கள், காங்., வேட்பாளர் ராஜேஷ், 43 ஆயிரத்து, 960 ஓட்டுக்கள் பெற்றனர்.


நடந்து முடிந்த தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி, தி.மு.க., - காங்., கூட்டணியில், தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகனும் போட்டியிட்டனர். 2014 தேர்தல் கணக்குப்படி, அ.தி.மு.க., கூட்டணிக்கு, ஏழு லட்சத்து, 27 ஆயிரத்து, 296 ஓட்டுக்கள், தி.மு.க., கூட்டணிக்கு, இரண்டு லட்சத்து, 96 ஆயிரத்து, 728 ஓட்டுக்கள் இப்போது உள்ளன. இதனால், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ம.க., வேட்பாளர் மூர்த்தி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கு நேர் மாறாக, தி.மு.க., வேட்பாளர், ஆறு லட்சத்து, 72 ஆயிரத்து, 190 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சி பாவேந்தன், 29 ஆயிரத்து, 347, மக்கள் நீதி மையம் ராஜேந்திரன், 23 ஆயிரத்து, 771, அ.ம.மு.க., பார்த்தீபன், 66 ஆயிரத்து, 826 ஓட்டுக்கள் பெற்றனர். ஜெகத்ரட்சகன் இந்தளவு ஓட்டுக்கள் பெற்றதற்கு காரணம், அ.தி.மு.க., நிர்வாகிகளை வைத்து, அக்கட்சி ஓட்டுக்களை விலைக்கு வாங்கி விட்டார் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது.


இதுகுறித்து, பா.ம.க.,வினர் கூறியதாவது: பா.ம.க.,வுக்கு கிடைக்க வேண்டிய, அ.தி.மு.க., ஓட்டுக்கள், மூன்று லட்சத்தில், 90 சதவீதம், தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ளது. இதனால், அவர் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டார். பா.ம.க., ஓட்டுக்கள் மட்டும் மூர்த்திக்கு கிடைத்ததால், அவர் மூன்று லட்சத்து, 43 ஆயிரத்து, 234 ஓட்டுக்கள் பெற்றார். உள்ளடி வேலை செய்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டியல் அக்கட்சி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டணி தர்மத்தை நாங்கள் கடைப்பிடித்ததால், சோளிங்கர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத் வெற்றி பெற்றார். இவ்வாறு அவர்கள் கூறினர். இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை, முக்கிய நிர்வாகி களை விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.


 

Advertisement
மேலும் வேலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X