வேலைவாய்ப்பு தரும் சிவில் துறை; கள பயிற்சியில் கல்லுாரி மாணவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2019
23:31

சிவகாசி : மனிதன் வாழ்வில் கட்டடமும், இயந்திரமும் இரண்டற கலந்த ஒன்று. அடுக்குமாடி கட்டடங்கள், பாலங்கள், ரோடு, மாதிரி நகரங்கள் போன்றவை அமைவதற்கு கட்டடக் கலை மிகவும் அவசியம். இதுபோன்ற கட்டுமான துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது சிவில் இன்ஜினியரிங் படிப்பு மட்டுமே. இனி வரும் காலங்களில் கட்டப்படும் அனைத்து கட்டடங்களுக்கும் சிவில் இன்ஜினியர்களின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று. ஏனெனில் அவர்கள்தான் முறையான திட்டமிடுதலுடன் கட்டடங்களை வடிவமைப்பார்கள். திட்டமிடல், வடிவமைப்பு, போன்றவற்றை இவர்கள்தான் செய்ய முடியும்.



எனவே சிவில் இன்ஜினியரிங் படிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.அதேபோல் இயந்திர துறை வடிவமைப்பில் பல்வேறு மென்பொருள் முக்கிய பங்காற்றுகின்றன. புதிய பொருட்கள் கண்டுபிடிப்பில் மிகவும் நுண்ணிய தொழில்நுட்பம், முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தொழில்நுட்பம் மூலம் நானோ பொருட்கள், நானோ திரவம், நானோ பெயின்ட் தயாரிக்கப்படுகிறது. இயந்திரவியல் துறையில் மேனுபேக்சர் டொமெய்ன், தெர்மல் டொமெய்ன், டிசைன் டொமெய்ன், மேனேஜ்மென்ட் டொமெய்ன் என நான்கு பிரிவுகள் உள்ளது. சிவில் மற்றும் இயந்திரவியல் துறை பொறியியல் படிப்புகள் வேலைவாய்ப்பினை அதிகம் ஏற்படுத்தி தரக்கூடிய படிப்புகளாகும். இத்தகைய சிவில் , இயந்தரவியல் துறை பொறியியல் மாணவர்களுக்காக சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.



இங்கு மாணவர்களுக்கு அதிகளவில் பயிற்சி முகாம், புரொஜக்ட், களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்கள், தாங்களே புதிதாக கண்டுபிடித்து பயன்படுத்தும் அளவிற்கு பல்வேறு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.படிப்புடன் பயிற்சிஇன்றைய காலத்தில் சிவில் மற்றும் இயந்திரவியல் துறை சார்ந்த படிப்புகள் முக்கியான ஒன்று. அன்றாட வாழ்வில் இரண்டிற்குமே முக்கிய இடமுண்டு. இந்த படிப்புகளுக்காக கல்லுாரியில் அதிகளவில் முனைவர் பட்டங்கள் பெற்ற ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.



மாணவர்களுக்கு படிப்பு மட்டுமல்லாமல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாணவர்களை நேரிடையாக பல்வேறு இடங்களுக்கு சென்று பிராக்டிக்கலாக கற்றுத் தரப்படுகிறது. சிவில் மற்றும் இயந்திரவியல் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கல்லுாரியில் அதற்குரிய பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சோலைச்சாமி, தாளாளர், பி.எஸ்.ஆர்., கல்லுாரிநேரில் பார்வையிட்டு கற்கிறோம்கட்டடக் கலை என்பது மிகவும் சிறப்பான ஒன்று.



இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் முறையான பொறியாளர்களை வைத்து கட்டடங்களை கட்டாமல் , அவர்களாக திட்டமிட்டு கட்டுகின்றனர். இதில் முழுமையான திருப்தி கிடைக்காது. சிவில் பொறியாளர்களால் திட்டமிடப்பட்டு கட்டப்படும் கட்டடங்களே சிறப்பாக இருக்கும். கல்லுாரியில் சிவில் படிப்பிற்காக சிறப்பான கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. படிப்பு மட்டுமல்லாமல், பிராக்டிக்கலாகவும் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். பல்வேறு கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு கற்றுக் கொள்கிறோம். நிரஞ்சனா, சிவில் , மூன்றாம் ஆண்டு மாணவி.வேலைக்கு உத்தரவாதம்எங்கள் கிராமத்தில் முறையாக எந்த கட்டடமும் கட்டப்படவில்லை.



முறையான திட்டமிடுதலோடு வீடுகளை கட்டுவதற்காக இக்கல்லுாரியில் சிவில் படிப்பினை தேர்ந்தெடுத்தேன். இங்கு புரொஜக்ட் களை நாங்களே தயார் செய்கிறோம். இதற்காக ஒர்க்ஷாப் விசிட் மேற்கொண்டுள்ளோம். புதிய தொழில்நட்பங்களை கற்றுக் கொண்டுள்ளோம். வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதம் உள்ளது.முருகவேணி, சிவில், மூன்றாம் ஆண்டு மாணவி.தந்தை வழியில் நான்எனது தந்ததை ஒரு மெக்கானிக். அவர் அனுபவத்தில் வேலை செய்வதை நான் படித்து புதிய தொழில்நுட்பத்தில் வேலை செய்வதற்காக இத்துறையை தேர்ந்தெடுத்துள்ளேன்.



பல்வேறு இடங்களுக்கு நேரிடையாக சென்று பிராக்டிக்கலாக பலவற்றை கற்றுள்ளோம். ஆசிரியர்கள் இதற்காக கடுமையாக உழைக்கிறார்கள்.சத்யபாமா, இயந்திரவியல், இரண்டாமாண்டு மாணவி,புதிய நுட்பங்களை கற்கிறோம்நவீன ஆய்வுக் கூடங்கள் மூலமாக ஏராளமான புதிய நுட்பங்களை கற்றுக் கொடுக்கிறார்கள். தனித்தனியாக ஆய்வக ஆய்வக வசதி உள்ளது. இயந்திரவியல் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இங்கிருந்து நிறைய மாணவர்கள் வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் பணி புரிகின்றனர்.மதியழகன், இயந்தரவியல், மூன்றாமாண்டு மாணவர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X