| 'சர்கியூட்' பஸ்களாக மாற்றம்: கிராம மக்கள் காத்திருப்பு Dinamalar
'சர்கியூட்' பஸ்களாக மாற்றம்: கிராம மக்கள் காத்திருப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 மே
2019
22:01

ஊட்டி;ஊட்டியில் இருந்து கிராமங்களுக்கு இயக்கிய பஸ்களை 'சர்கியூட்' பஸ்களாக மாற்றி இயக்குவதால், உள்ளூர் மக்கள், பல மணி நேரம் காத்திருந்து பயணம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.ஊட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடத்திற்கு, 140 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சீசனையொட்டி, 50க்கு மேற்பட்ட 'சர்கியூட்' பஸ்கள் மே, 31ம் தேதி வரை இயக்கப்படுகிறது. குறிப்பாக, சனி, ஞாயிறு நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், கிராம பஸ்கள் 'சர்கியூட்' பஸ்களாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் உள்ளூர் பயணிகள், மணிக்கணக்கில் காத்திருப்பதால் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கிராமங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X